இந்திய நாடு கண்டறியாத மிகப்பெரும் கவலை அளிப்பதாக ஐ.நா. பொதுச்செயலாளர் வரையிலும் கவலை தெரிவித்து வருகிறார்கள்.
டெல்லி போராட்ட களத்தில் சோனியா காந்தி..! எங்கே போனார் ராகுல்காந்தி..?

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் இன்று குடியரசுத் தலைவரை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். அதன்படி, உள் துறை அமைச்சர் அமித் ஷாவை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த சோனியா காந்தி, ‘மத்திய அரசின் தோல்வியால்தான் இத்தகைய வன்முறை நிகழ்ந்துள்ளது. உடனடியாக அமித் ஷாவை பதவி விலகச் சொல்ல வேண்டும். காவல் துறையை டெல்லி ஆட்சி வசம் ஒப்படைக்க வேண்டும்’ என்று பேசினார்.
இத்தனை பெரிய கலவரம் ஏற்பட்ட நேரத்திலும், இதுவரை ராகுல் காந்தி டெல்லிக்கு வந்து சேரவில்லை என்பதுதான் காங்கிரஸ்காரர்கள் மட்டுமின்றி, அத்தனை கூட்டணிக் கட்சிகளின் ஆதங்கம். நாளைய பிரதமர் என்று அடையாளம் காட்டப்படும் ராகுல்காந்தி இப்படி பொறுப்பில்லாமல் இருக்கலாமா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
எங்கே போனார் ராகுல்காந்தி என்று விசாரித்தால், தாய்லாந்து நாட்டில் என்றும், ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார் என்றும் பதில் வருகிறது. ஆனால், இந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பக்கத்தில் நிற்காமல் ராகுல் காந்தி காணாமல் போனது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.