மும்பையின் முலுந்த் என்ற இடத்தில் தாயுடன் இருந்த அவரது நண்பரை ஆத்திரத்தில் அடித்தே கொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கள்ளக் காதலனுடன் உல்லாசமாக இருந்த பெற்ற தாய்! நேரில் பார்த்த மகன் செய்த தரமான சம்பவம்!

மும்பையின் முலுந்த் என்ற இடத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞன் ரவி கேட். இவரது தந்தை காவலாளியாக பணியாற்றும் நிலையில் இவரது தாய் வீட்டிலேயே உணவுக் கடை நடத்தி வருகிறார் ரவி புதிதாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு மின்சாரப் பணிகளை மேற்கொண்டு வந்தார்.
இவரது தாயிடம் மதிய உணவு மற்றும் டிபன் சாப்பிட் சில வாடிக்கையாளர்கள் வருவது வழக்கம் அந்த வகையில் 55 வயது ஆட்டோ ஓட்டுநரான தேவேந்திர சிங் என்பவர் கேட்டின் தாயிடம் மதிய உணவும், இரவு டிபனும் சாப்பிட வருவது வழக்கம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை தனது வீட்டுக்கு வந்த ரவி தேவேந்திர சிங் தனது தாயுடன் இருப்பதைப் பார்த்து சந்தேகமும் ஆத்திரமும் அடைந்ததாகக் கூறப்படுகிறது. அவர் தேவேந்திர சிங்கை எட்டி உதைக்கவும், சரமாரியாகத் தாக்கவும் செய்தார். சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்ற தாக்குதலால் தேவேந்திர சிங் சுருண்டு விழுந்து இறந்தார்.
இது தொடர்பாக ரவியின் தாய் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க, ரவியின் மீது கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.