மாமியார் மேல் கைவைத்த மருமகனுக்கு பிறந்த அழகிய குழந்தை! கொலையான மறுநாள் நிகழ்ந்த பிரசவம்!

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அடுத்த இடையர் பாளையம் அருகே மாமனாரால் கொல்லப்பட்ட மருமகனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.


 இடையர்பாளையத்தை அடுத்த செட்டியார் அம்மாகாடு கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவருடைய மகன் ராஜேந்திரன் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி குமார் என்பவரின் மகள் ஷாலினியை காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு மணமுடித்தார்.

இந்நிலையில் ஷாலினி கர்ப்பமடைந்துள்ள நிலையில் ரத்த சோகை ஏற்பட்டதாலும் எந்நேரமும் குழந்தை பிறக்கலாம் என்பதாலும் குமாரின் மனைவி ஷாலினி கோவை அரசு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் குழந்தை பிறக்க தாமதம் ஆகும் என்பதை மருத்துவர் உறுதி செய்ததை அடுத்து ஷாலினி தந்தை வீட்டிற்கு திரும்பிவிட்டார்.

இதையடுத்து ஷாலினியை நலம் விசாரிக்க வந்த குமாரின் பெற்றோரும் ஷாலினியின் பெற்றோரும் பேசிக்கொண்டிருந்தபோது சம்பந்தியிடம் ஷாலினியின் தாயார் உங்கள் மகன் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார். ஒழுங்காக வேலைக்கு சென்றால்தானே மனைவி குழந்தையை காப்பாற்றுவார் என கூறியுள்ளார். 

மாப்பிள்ளை ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் போதிய காசு இல்லாமல் வளைகாப்பு கூட செய்ய முடியவில்லை என ஷாலினியின் தாயார் கூறியுள்ளார். மேலும் இப்போதே பொறுப்பில்லாமல் இருக்கும் குமார் குழந்தையை எப்படி பார்த்துக்கொள்வார் என கேட்க கோபம் அடைந்த மருமகன் மாமியார் மீனாவை கன்னத்தில் பளார் என அறைந்தார்.

இதனால் வேதனை அடைந்த மீனா தனது கணவரான ராஜேந்திரனிடம் குமார் அடித்தது பற்றி கூறினார். இதையடுத்து மாமனார் மருமகன் இடையே வாய்த்தகராறு முற்றி ஒருவருக்கொருவர் கைகலப்பு ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியாத ராஜேந்திரன் தனது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மருமகன் குமாரை சரமாரியாக தாக்கினார். இந்த சம்பவத்தில் குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிருக்கு போராடிய நிலையில் கோவை அரசு மருத்துவமனைக்கு அக்கம் பக்கத்தினர் கொண்டு செல்லும்போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து வழக்குப் பதிந்த துடியலூர் போலீசார் மருகமனை கொன்று மகளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய மாமனார் ராஜேந்திரனை வலைவீசி தேடிவருகின்றனர். இதற்கிடையே கணவர் உயிரிழந்ததால் உடல்நலக்குறைவு ஏற்பட்ட ஷாலினி கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கணவர் உயிரிழந்தாலும் அவரது உருவில் தனக்கு மகனாக அவரே பிறந்ததாக கருதி ஷாலினி சற்றே ஆறுதல் அடைந்தது நமக்கும் ஒருவிதமாக மகிழ்ச்சிதான்.

குடும்பப் பிரச்சனையை பேசி தீர்க்காமல் அதை ஊதி பெரிதாக்கி மருமகனையும் கொன்றுவிட்டு மகளின் வாழ்க்கையை நிர்மூலமாக்கிவிட்டு தற்போது தனது மனைவியையும் தன்னந்தனியாக தவிக்கவிட்டு போலீசுக்கு பயந்து தலைமறைவாக இருக்கும் ராஜேந்திரனை சட்டம் தண்டிக்குமோ இல்லையோ தெரியாது. ஆனால் அவர் செய்த அற்பத்தனமான செயலே அவரது குடும்பத்துக்கு பெரிய தண்டனை ஆகிவிட்டது