டூவீலர் வழுக்கி தாய் கண் முன் துடிதுடிக்க இறந்த மகன்! சென்னையில் துயரம்!

சென்னையில் பெற்ற தாயின் கண் முன் பெற்ற மகன் இறந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.


சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்த கீதா. இவருக்கு 6 வயதில் தர்சன் எனும் மகனும், தியா என்கிற மகளும் உண்டு. திருவேற்காட்டில் இருந்து உறவிர் ஒருவரை சந்திக்க தனது டூவிலரில் மகன் மற்றும் மகளை ஏற்றிக் கொண்டு கீதா புறப்பட்டுள்ளார்.

வானகரம் அருகே டூவீலர் வந்த போது டிராபிக் அதிகமாக இருந்துள்ளது. அப்போது வாகனம் நிலை தடுமாறியுள்ளது. இதனால் டூவீலரில் இருந்த மகன் தர்சன் கீழே விழுந்துள்ளான்.அப்போது பின்னால் வந்த லாரி ஒன்று தர்சன் மீது ஏறியது. இதனால் சம்பவ இடத்திலேயே தர்சன் துடி துடித்து இறந்தார். இந்த சம்பவம் பெற்ற தாய் முன்னிலையிலேயே அரங்கேறியது.

மகன் உயிரிழந்ததை பார்த்து தாய் கீதாவும் சகோதரி தியாவும் கதறியது காண்போரை கலங்க வைத்தது.