தந்தையர் தினத்தில் அப்பா - அம்மாவுக்கு கோவில்! வேலூர் இளைஞனின் நெகிழ வைக்கும் செயல்!

வேலூரில் தனது பெற்றோருக்கு சொந்த செலவில் கோயில் எழுப்பி தினமும் பூஜித்த வந்த மகன், தந்தையர் தினத்தில் கொண்டாடப்படும் மகனாகியுள்ளார்.


வேலூர் மாவட்டம் சலவன்பேட்டை செங்காநத்தம் ரோடு பாரதியார் நகரைச் சேர்ந்தவர்  தந்தை வெள்ளை நாயக்கர் -  ஜெகதாம்பாள். இவர்களுக்கு ராமசந்திரன்,தனலட்சுமி என இரு பிள்ளைகள் உள்ளனர். வெள்ளை நாயக்கர் சரிவர வேலை இல்லாமல் இருந்ததால்,  இவர்களது குடும்பம் கடும் வறுமையில் கஷ்டப்பட்டதை அடுத்து மனம் தளராமல் ஜெகதாம்பாள் உழைத்து  குழந்தைகளை பார்த்து பார்த்து வளர்த்து உள்ளார்.

தனது இளமைப் பருவத்தில் பெற்றோர்களின்  தியாகத்தையும் உணர்ந்த ராமச்சந்திரன்  அடுத்த  தலைமுறைக்கும் தன் பெற்றோர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தார்கள் என்பதை உணர்ந்த விரும்பினார். இதையடுத்து பாரதியார் நகரில் தனது வீட்டை அடுத்துள்ள  சொந்த நிலத்தில் தனது தாய் ஜெகதாம்பாள்-தந்தை வெள்ளை நாயக்கர் ஆகிய இரண்டு பேருக்கும் மகன் ராமச்சந்திரன் கோயில் கட்டி எழுப்பினார்.

இருவரது உருவ சிலையும் 6 அடி உயரத்தில் ஒவ்வொரு சிலையும் தலா ரூ.7 லட்சம் வீதம் மதிப்புள்ளது.  ராமச்சந்திரன் தனது பெற்றோருக்கு பூஜை செய்ய ஒரு நாளும் தவறியதில்லை.இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ராமச்சந்திரன் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தனர்.,

இதை அடுத்து ராமச்சந்திரன் மனைவி மண்ணம்மாள், மகள்கள்- முனியம்மாள், சுஜாதா மகன் தண்டபாணி ஆகியோர் ராமச்சந்திரன் கட்டி எழுப்பிய கோயிலை பொறுப்புடன் பராமரித்து வருகின்றனர். தாய் - தந்தையை முதியோர் இல்லத்தில் சேர்ப்பவர்களுக்கு மத்தியில்  பெற்ற தாய் - தந்தைக்கு கோவில் கட்டியுள்ள இளைஞர் அனைவருக்கும் முன்னுதாரணம் தான்.