மனைவி, 3 குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்து என்ஜினியர் செய்த கொடூரம்! தப்பி ஓடியவனை பிடிக்க முடியாமல் திணறல்!

மனைவி குழந்தைகளுக்கு மயக்க மருந்து கலந்த பானத்தைக் கொடுத்து கழுத்தை அறுத்துக் கொன்ற மென்பொறியாளரை போலீசார் தேடி வருகின்றனர்.


ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த சுமித் குமாரி என்பவர் காஸியாபாத்தில் வசித்து வந்தார். பெங்களூருவில் ஒரு மென் பொருள் நிறுவனத்தில் பணியாற்ற்றி வந்த இவர், கடந்த ஆண்டு அந்த நிறுவனம் தங்கள் மென்பொருளை மேம்படுத்திய நிலையில் அதனை புரிந்துகொண்டு பணியாற்ற முடியாததால் அவர் வேலையை ராஜினாமா செய்தார். 

இதனால் குடும்பம் கடும் நிதி நெருக்கடியில் தள்ளப்பட சுமித் குமார் போதை மருந்துப் பழக்கத்துக்கும் அடிமையானார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமைக்கும், ஞாயிற்றுக் கிழமைக்கும் இடைப்பட்ட இரவில் அவர் தனது 32 வயது மனைவி அன்ஷு பாலா, 5 வயது மகன் பிரதிமேஷ், 4 வயது இரட்டைக் குழந்தைகளான மகள் அக்ரிதி, மகன் ஆரவ் ஆகியோருக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்ததாகக்கூறப்படுகிறது

அவர்கள் அனைவரும் மயக்கம் அடைந்ததையடுத்து நள்ளிரவில் தலைமறைவானதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் 22 மணி நேரத்துக்குப் பிறகு தனது குடும்ப வாட்ஸ் அப் குரூப்பில் தனது மனைவி குழந்தைகளை கொன்றது குறித்து சுமீத்குமார் பேசி வீடியோ வெளியிட்ட பின்பே கொலைச் சம்பவம் அம்பலத்துக்கு வர உடல்களை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள சுமீத் குமாரை பிடிக்க 3 தனிப்படைகளை போலீசார் அமைத்துள்ளனர். 

தானும் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக சுமீத்குமார் அந்த வீடியோவில் பேசியுள்ள நிலையில் அது போலீசாரை தவறாக வழிநடத்துவதற்கான தந்திரமாக இருக்கக்கூடும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.