ஆபாச புகைப்படம்! டேட்டிங் செயலி! ஒரே நேரத்தில் 300 பெண்கள்! போலீசையே மலைக்க வைத்த வினோத்குமார்!

300 பெண்களை சமூக வலைதளங்களில் பின் தொடர்ந்து மிரட்டி பணம் பறித்ததாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்த நபரை ஹைதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.


பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் போலீசாரைத் தொடர்பு கொண்ட போது  இந்த விவகாரம் அம்பலத்துக்கு வந்தது. அந்தப் பெண் சைபர் கிரைம் போலீசாரிடம் அளித்த புகாரில் அந்த நபர் தன்னை செல்பேசி மூலம் தொடர்பு கொண்ட அந்த நபர் தன்னை சிஸ்கோ சிஸ்டம்ஸ், டெல் உள்ளிட்ட நிறுவனங்களுக்காக பணியாற்றும் பொறியாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டதாகத் தெரிவித்தார். 

மேலும் அந்த நபர் பல்வேறு சமூக வலைதளங்கள், ஆபாச மற்றும் டேட்டிங் செயலிகளில் இருந்து தனது புகைப்படங்களை நீக்குவதாகவும் அதற்கு மாதம் தோறும் 10 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என்றும் கூறி தனது சமூக வலைதள விவரங்களை பெற்றதாகக் கூறினார். ஆனால 4 மாதங்கள் 40 ஆயிரம் ரூபாய் கொடுத்த பிறகு அந்த நபர் ஏமாற்றுப் பேர்வழி என்று தெரியவந்ததையடுத்து பணம் கொடுப்பதை நிறுத்தியதாகவும் தெரிவித்தார்.

ஆனால் அதன் பிறகு சில நாட்களில் தனது புகைப்படம் தொடர்பு எண்ணுடன் ஆபாச மற்றும் டேட்டிங் செயலிகளில் பதிவிடப்பட்டதாகவும், இதனால் பல்வேறு நபர்கள் தன்னை தொடர்பு கொண்டதாகவும் கூறினார் இதையடுத்து அந்த நபர் தன்னை தொடர்பு கொண்டு தனக்கு தொடர்ந்து பணம் கொடுத்தால் அவற்றை டெலிட் செய்வதாகத் தெரிவித்ததாக கூறியதாகத் தெரிவித்த அவர் அதன் பிறகு தான் போலீசாரை தொடர்பு கொண்டதாகத் தெரிவித்தார். 

அதன் பேரில் தொடர்ந்து புலனாய்வு மேற்கொண்ட சைபர் கிரைம் போலீசார் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த வினோத்குமார், என்ற சந்தீப் என்ற பிரவீணை கைது செய்தனர். அந்த நபர் இதே பாணியில் 300க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியது  தெரிவந்ததை அடுத்து அந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர்.