சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது பக்கத்து வீட்டு பெண்ணுடன் ஏற்பட்ட தகராறில், பள்ளி செல்லும் அவரது மகளை நடிகர் விஷாலுடன் தொடர்புபடுத்தி, ஆபாசமான படங்களையும், அவதூறு கருத்துக்களையும் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்த பெண் கைது.
விஷாலுடன் டீன் ஏஜ் சிறுமிக்கு தகாத உறவு என சோசியல் மீடியாவில் தகவல்! இளம் பெண்ணை தட்டி தூக்கியது போலீஸ்!

சென்னையில் விஷ்வ தர்சினி என்ற பெண் தனது பக்கத்து வீட்டு பெண்ணுடன் ஏற்பட்ட தகறாரில் பழிவாங்க நினைத்த தர்ஷினி. பக்கத்து வீட்டு பெண்ணின் பள்ளி செல்லும் மகளை நடிகர் விஷாலுடன் இணைத்து ஆபாசமாக படங்களை சமூக வலைத்தளத்தில் பரப்பினார். இது குறித்து சிறுமியின் தாயார் ராயப்பேட்டை மகளிர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இந்தத் வழக்கு மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலிசாருக்கு மாற்றப்பட்டு இருந்தது. சைபர் கிரைம் போலீசார் விஸ்வ தர்ஷினி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர்.இந்த நிலையில் விஸ்வ தர்ஷினி திருச்சங்கோட்டில் தலைமறைவாக இருப்பதாக வந்த தகவலையடுத்து சென்னை சைபர் கிரைம் போலிசார் அங்கு சென்று கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.
சென்னை அழைத்துவரப்பட்ட தர்ஷினி இன்று காலை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையிலடைக்கப்பட்டார்.