மருத்துவமனையில் ஒரு கையில் சேமிப்பு பணம்! மறு கையில் காயம் பட்ட கோழிக்குஞ்சு! உருகச் செய்த சிறுவனின் மனிதநேயம்!

கோழிக்குஞ்சை காப்பாற்றுவதற்காக சிறுவன் மேற்கொண்ட முயற்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.


மிசோரம் மாநிலம் சாய்ரங் என்ற கிராமத்தைச் சேர்ந்தவன் டெரிக் லட்சன்மா. ஆறு வயது மட்டுமே நிரம்பிய சிறுவன் தனது வீட்டுக்கு அருகே மிதிவண்டியில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரின் கோழி குஞ்சு ஒன்றும் அப்பகுதியில் சுற்றித் திரிந்தது.

அந்த சமயத்தில் அந்தக் கோழி குஞ்சை டெரிக் தனது மிதிவண்டியால் ஏற்றி உள்ளான். அப்போது அந்தக் கோழி குஞ்சு இறந்து விட்டது. இருப்பினும் அதை அறியாத அச்சிறுவன் தனது தந்தையிடம் கோழிக்குஞ்சை தூக்கிச் சென்றுள்ளார். போராடி கொஞ்சம் காப்பாற்ற வேண்டும் என அவன் கூறியிருக்கிறான்.

அந்தக் கோழிக்குஞ்சு ஏற்கனவே இறந்து போய்விட்டது என்பதை அறிந்தும் தனது மகனை தனியாக மருத்துவமனைக்கு செல்லுமாறு தந்தை அறிவுறுத்தி உள்ளார். இதையடுத்து தான் சேமித்து வைத்திருந்த பத்து ரூபாய் பணத்துடன் அச்சிறுவன் கோழிக்குஞ்சை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

கோழிக்குஞ்சு இழந்துவிட்ட போதிலும் சிறுவனின் மனிதநேயத்தை அறிந்த செவிலியர் ஒருவர் அவனது புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பரப்பினார். இதன் மூலம் அவன் தற்போது சமூக வலைதள ஹீரோவாக புகழப்படுகிறான். கோழிக்குஞ்சை கையில் வைத்துக் கொண்டு சிறுவன் பரிதாபமாக நிற்கும் புகைப்படம் எஞ்சியிருக்கும் மனிதநேயத்திற்கு சான்றாக உள்ளது.