கடலூரில் வீட்டிற்க்குள் நுழைந்த பாம்பிற்க்கு ஜோடி போட்டு பெண் ஒருவர் சாமியாடிய சம்பவம் பெரும் சர்ச்சையானதுடன் அந்த பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
டேய் அது ஆத்தாடா! வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீள நல்லபாம்பு! முன்னால் அமர்ந்து பெண்மணி செய்த செயல்!
கடலூர் மாவட்டம் தேவனாம் பட்டினம் பகுதியை சேர்ந்த சரஸ்வதி என்பவர் வீட்டிற்க்குள் யாரும் எதிர்ப்பாராத விதமாக சுமார் 6 அடி நீளமுள்ள பாம்பு நுழைந்துள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பாம்பு பிடிக்கும் நபருக்கு தகவல் தெரிவிக்க, வீட்டின் உரிமையாளர் சரஸ்வதியோ பாம்பை பார்த்த பரவஸத்தில் சாமி ஆட ஆரம்பத்து விட்டார்.
ஒரு பக்கம் வீட்டிற்க்குள் நுழைந்த பாம்பை அந்த பாம்பு பிடிக்கும் நபர் தேடி அலைய மற்றொரு பக்கம் சரஸ்வதியோ பாம்பை பிடிக்க கூடாது அது அம்மன் என சாமியாடி கொண்டிருந்தார். இதற்கிடையில் வீட்டின் கூரையில் நின்றபடி படமெடுத்து ஆடிக்கொண்டிருந்த பாம்பை பார்த்து அதற்க்கு ஏதுவாக சரஸ்வதி சாமி ஆட அந்த பகுதி மக்கள் பீதியில் இருந்தனர்.
இந்த நிலையில் சாமி ஆடிய சரஸ்வதி டயர்டாகி கண்ணசர, லாவகமாக பாம்பை பிடித்து சென்று காட்டுப்பகுதிக்குள்ளாக அனுப்பி வைத்துள்ளனர்.