சிவகங்கை: வீட்டிற்குள் அரசு முத்திரை பதித்த நாப்கின்களை பதுக்கிய நபர் பிடிபட்டார்.
பெண்கள் அந்த 3 நாட்களில் பயன்படுத்தும் நாப்கின்களை திருடிய விநோத நபர்! வீட்டுக்குள் குவியல் குவியலாக சிக்கியது! சிவகங்கை பரபரப்பு!
சிவகங்கை மாவட்டம் இலுப்பக்குடியில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்படுகிறது. இந்த பள்ளியில் கடந்த நவம்பர் 6ம் தேதி இரவு 10.30 மணியளவில் திருட்டு நடந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த மடிக்கணினிகள், ஸ்மார்ட்ஃபோன் மற்றும் இலவச நாப்கின்கள் ஆகியவற்றை காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதை திருடியது யார் என தெரியாமல் போலீசார் குழப்பத்தில் இருந்தனர்.
இந்நிலையில், திருடுபோன பள்ளி அருகே உள்ள இலுப்பக்குடி கண்மாய்க்கரையில் அரசு முத்திரையுடன் கூடிய நாப்கின்கள் மற்றும் மடிக்கணினிகள் கிடப்பதாக தகவல் கிடைக்கவே, போலீசாரும், பள்ளி ஆசிரியர்களும் அங்கு சென்று பார்த்தனர். இதன்பேரில் போலீசார் விசாரித்தபோது, நாப்கின்கள் கிடந்த இடத்தின் அருகே அமைந்துள்ள வீட்டின் உரிமையாளர் சாத்தையா என்பவர் சிக்கியுள்ளார்.
விசாரணையில் அவர், ''எனது வீட்டில் குடியிருந்த பாண்டியன் என்பவர் நீண்ட நாளாக வாடகை தரவில்லை. இதனால், அவர் வெளியே சென்ற பிறகு, மாற்று சாவி மூலமாகக் கதவை திறந்து அவர் வைத்திருந்த பொருட்களை எடுத்து குப்பையில் வீசிவிட்டேன். ஆனால், இவை திருட்டுப் பொருட்கள் என்று எனக்குத் தெரியாது,'' எனக் கூறியிருக்கிறார். இதையடுத்து, தலைமறைவாக உள்ள பாண்டியனை போலீசார் தேடி வருகின்றனர்.