முள் படுக்கை மீது தான் படுப்பார்..! கரெக்டா குறி சொல்லுவார்..! சிவகங்கையை கலக்கும் முள்படுக்கை சாமியாடி..!

சிவகங்கை: முள் படுக்கையில் கிடந்தபடி குறி சொல்லும் பெண் சாமியாரை பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.


திருப்புவனம் அருகே உள்ள லாடனேந்தல் முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும், நாகராணி என்பவர் முள்படுக்கையில் அமர்ந்து தவம் செய்வது வழக்கம். இதன்படி, நடப்பாண்டிலும் அவர் தவம் செய்து வருகிறார். இதையொட்டி, அவரிடம் ஆசிபெற மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கற்றாழை உள்பட பல்வேறு விதமான முட்கள் சேகரிக்கப்பட்டு, அதனை 4 அடி உயரத்திற்கு மெத்தை போல அமைத்துவிடுவார்கள். இதன்மீது, பூஜை செய்த நீரை தெளித்துவிடுவார்களாம். பின்னர் அதில் அமர்ந்து நாகராணி தன்னை நாடி வருபவர்களுக்கு குறி சொல்வது வழக்கம்.  

இதன்படி, தற்போது குழந்தை பாக்கியம், திருமண வரம், வேலையின்மை உள்ளிட்ட குறைபாடுகள் பற்றி பக்தர்கள் நாகராணி அம்மையாரிடம் தெரிவித்து, ஆசி பெற்று வருகின்றனர்.