விபச்சார பெண்களை மதிக்கிறேன்! ஆனால் பணத்திற்காக படுக்கைக்கு செல்பவளா நான்? அதிர வைக்கும் சின்மயி ட்வீட்!

தன்னை விபச்சாரி என்று குறிப்பிட்டு பேஸ்புக்கில் பதிவு வெளியிட்ட நபரை சின்மயி வலை வீசி தேடி வருகிறார்.


ட்விட்டரில் மிக பிரபலமாக இருப்பவர் சின்மயி. பெண்களுக்கு எதிரான பாலியல் வன் கொடுமை தொடர்பாக எதிர் கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு வருபவர் இவர்.

அவ்வப்போது இதன் காரணமாக தேவையில்லாத விவகாரங்களிலும் சின்மயி பெயர் அடிபடும். இதே போல் சின்மயியை ரசிகர்கள் சிலர் தகாத கேள்விகளால் சீண்டிவிடுவதும் உண்டு.

சமயத்தில் அந்த ரசிகர்களை ஜஸ்ட் லைக் தேட் என்று கடந்து சென்றுவிடுவார் சின்மயி. ஆனால் தொடர்ந்து சீண்டுபவர்களை ஒரு கை பார்த்துவிடுவதும் சின்மயியின் பழக்கம். இப்படித்தான் 5 ஆண்டுகளுக்கு முன்னர் சின்மயியை சீண்டிய இரண்டு பேர் கம்பி எண்ணும் நிலைக்கு சென்றனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் பரிதாபங்கள் என்கிற பெயரில் பேஸ்புக் பேஜ் நடத்தி வரும் நபர் ஒருவர் சின்மயியை மிக கேவலமாக விமர்சித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சின்மயி உடனடியாக ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில் பாலியல் தொழில் செய்யும் பெண்களை தான் மதிப்பதாக கூறியுள்ளார். அதே சமயம் பணத்திற்காக தான் யாருடனும் தன்னுடைய உடலை பகிர்ந்து கொள்வதில்லை என்று சின்மயி தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த பேஸ்புக் பேஜ் தான் பணத்திற்காக படுக்கைக்கு செல்வதாக தவறான தகவலை வெளியிட்டுள்ளதாக சின்மயி தெரிவித்துள்ளார். அந்த பேஜை ரிப்போர்ட் செய்யுமாறு கேட்டுக் கொண்ட சின்மயி, அந்த நபர் குறித்து தகவல் தெரிந்தாலும் தனக்கு தெரிவிக்குமாறு கூறியுள்ளார்.