எளிமைக்கு இலக்கணம் துணை முதல்வர்… செருப்பை கையில் வைத்துக்கொண்ட ஓ.பி.எஸ்...

சேறு இருக்கும் இடத்துக்கு சாதாரண அதிகாரிகள்கூட செல்வதில்லை. அப்படியே போவதாக இருந்தால், தன்னுடைய செருப்பைக் கழட்டி உதவியாளர் கையில் கொடுத்துவிட்டுத்தான் நடப்பார்கள். ஆனால், துணைமுதல்வர் இந்த விஷயத்தில் எளிமையின் மறு உருவம் என்பதை நிரூபித்திருக்கிறார்.


தேனி மாவட்டம், போடி கொட்டகுடி ஆற்றுப்பாசன வசதி பெரும் விவசாயிகள் விளைபொருட்களை கொண்டு செல்லவும், மேலப்பரவு பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் பயனடையும் வகையிலும் அமைய உள்ள சாலை மற்றும் ஆற்றின் நடுவே பாலம் அமைய இருக்கும் பகுதிகளையும் துணை முதல்வர் ஆய்வு மேற்கொண்டார். 

இப்பகுதியில், ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயநிலங்கள் உள்ளன. இப்பகுதி விவசாயிகள் மற்றும் மேலப்பரவு பகுதியில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களும் வசித்துவருகின்றனர். இவர்கள் அனைவரும் கொட்டகுடி ஆற்றைக் கடந்து செல்லும் சூழல் பல்லாண்டு காலமாக இருப்பதால் இவர்களின் கோரிக்கையை ஏற்று பிரதம மந்திரி கிராமசாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.123.14 லட்சம் செலவில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்த ஆற்றுப்பகுதியை பார்வையிட சென்ற துணைமுதல்வர் ஆற்றை கடந்து செல்ல முற்படும்போது தனது காலணிகளை கழற்றி தனது கைகளிலேயே வைத்துக்கொண்டார். உதவியாளர்கள் பலர் கேட்டபோதும் தரமறுத்து செறுப்பை கையில் பிடித்தபடியே ஆய்வு மேற்கொண்டார். மேலும், மேலப்பரவு மலைவாழ் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக கூறிய துணைமுதல்வர் அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.