நடிகர் சிம்பு சரியாக படப்பிடிப்பிற்கு வருவதில்லை என பல தயாரிப்பாளர்கள் பிரச்சனை செய்து வந்த நிலையில், சிம்புவை நம்பி அவருடன் கைகோர்த்த தயாரிப்பாளர் தான் சுரேஷ் காமாட்சி.
மாநாடு படத்துக்கு வாங்கிய ரூ.2 கோடி ஊ..ஊஊ! படப்பிடிப்புக்கு டிமிக்கி! சிம்புவால் கதறும் தயாரிப்பாளர்!

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் மாநாடு என்ற படத்திற்கு சமீபத்தில் சிம்பு ஒப்பந்தமாகி இருந்தார். இந்நிலையில் நடிகர் சிம்பு முன்பணமாக 2 கோடி ரூபாயை தயாரிப்பாளரிடமிருந்து பெற்று கொண்டு அடிக்கடி படப்பிடிப்பிற்கு விடுப்பு கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஊட்டியில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு 300க்கும் மேற்பட்ட படக்குழுவினருடன் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்ட நிலையில், நடிகர் சிம்பு வாரத்தில் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் படப்பிடிப்பிற்கு விடுப்பு கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்த முடியாமல் படக்குழுவினர் தவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிம்பு திரையுலகிற்கு வந்தது முதலே ஞாயிற்றுக்கிழமைகளில் நடிப்பது இல்லை. ஆனால் தற்போது சனிக்கிழமையும் நடிக்க முடியாது என்று அவர் கூறுவது அவரை நம்பி பல கோடி முதலீடு செய்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியை அதிர வைத்துள்ளது.
சிம்புவை வைத்து படம் எடுக்க யாருமே முன்வரவில்லை. இந்த நிலையில் அவருக்காக வக்காலத்து வாங்கியதுடன் படம் எடுக்கவும் முன்வந்த சுரேஷ் காமாட்சி தற்போது கைகளை பிசைந்து வருகிறார்.