இனி உன் சவகாசமே வேண்டாம் என்கிற ரீதியில் ஸ்ருதியின் வெளிநாட்டு காதலன் இன்ஸ்டாகிராம் போஸ்ட் வெளியிட்டுள்ளார்.
உன் சவகாசமே வேண்டாம்! ஸ்ருதியை கழட்டிவிட்ட வெளிநாட்டு காதலன்!

நடிகர் கமலின் மகளும் முன்னணி நடிகையுமான ஸ்ருதி ஹாசன் சுமார் நான்கு ஆண்டுகளாக லண்டனை சேர்ந்த இசைக்கலைஞர் மைக்கேல் கோர்சலேவுடன் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வந்தார். முதலில் மும்பையிலும் பிறகு லண்டனிலும் இவர்கள் குடித்தனம் இருந்து வந்தனர்.
சென்னையில் நடைபெற்ற உறவினர் திருமணத்திற்கு தனது காதலன் மைக்கேலை அழைத்து வந்து அவருக்கு வேட்டி சட்டை அணிவித்து அனைவருக்கும் அறிமுகம் செய்தார். இதனால் ஸ்ருதி விரைவில் மைக்கேலை திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சில நாட்களுக்கு முன்னர் லண்டனில் இருந்து வந்த ஸ்ருதி சென்னையில் தந்தையுடன் தங்கிவிட்டார். தற்போது விஜய் சேதுபதியுடன் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த நிலையில் ஸ்ருதியின் காதலன் ஒரு பதிவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
அதில் ஸ்ருதி ஒரு சிறப்பான பெண்மணி என்று மைக்கேல் கூறியுள்ளார். எப்போதும் ஸ்ருதி எனக்கு தோழியாகவே இருப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார் இதன் மூலம் ஸ்ருதியுடனான காதலை மைக்கேல் முறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.