என் மகளை சுட்டுக் கொலை பண்ணுனாங்க! அஞ்சலி செலுத்த ஆதார் கேட்குறாங்க! தவிக்கும் ஸ்னோலின் தாய்!

தூத்துக்குடி தூப்பாக்கிச்சூட்டில் இறந்த தனது மகளின் கல்லறைக்கு அஞ்சலிசெலுத்த சென்ற தாயிடம் ஆதார் அட்டைய காட்டச் சொல்லி காவல்துறையினர் கேட்டு உள்ளனர். அதற்கு ”எதுக்குய்யா ஆதார் கார்டு?” என கொந்தளிக்கிறார் அவரது தயார் வனிதா.


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் 100-வது நாளில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்ட 17 வயது மாணவி ஸ்னோலினி திடீர் கலவரத்தில் துப்பாக்கிச்சூடு உயிரிழந்தார். இதில், 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த தூத்துகுடி சம்பவத்தின் 2-ம் ஆண்டு நினைவு நாளான இன்று, ஸ்னோலினின் தாயார் வனிதா அவர்கள் கல்லறைத் தோட்டத்தில் ஸ்னோலினின் கல்லறையில் அஞ்சலி செலுத்தி சென்றார். இதற்கிடையில், கல்லறைக்குப் போயி அஞ்சலி செலுத்தப் போகணும்னா ஆதார் அட்டைய ஸ்டேஷன்ல காட்டிட்டு போகணும்னு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதற்கு அந்த பெண்ணின் தாய் பெத்த பிள்ளைய அடக்கம் செஞ்ச கல்லறையில கண்ணீர் சிந்தி அஞ்சலிசெலுத்த எதுக்குய்யா ஆதார் அட்டை? என்று கேட்டுள்ளார். ரெண்டு நாளுக்கு முன்னால இருந்தே எங்க வீடு, கல்லறைத் தோட்டம் அருகில் காவல்துறையினர் இரவு பகலா கண்காணிச்சுட்டு வந்து இருக்காங்க.

இப்போ வரைக்கும் அந்த பெண்ணின் குடும்பத்தில் உள்ள யாரு எங்க போனாலும் இப்போ வரைக்கும் பின்தொடர்ந்து வந்து கண்காணிச்சுக்கிட்டே இருக்காங்க. மேலும், அவர்கள் தெரிவிப்பது என்னவென்றால், நாங்க என்ன தேசத் துரோகிகளாய்யா? வீட்டுக்கு புதுசா யாராவது வந்தாக்கூட அவங்க யாரு, எங்கிருந்து வர்றாங்க, என்ன விசயமா வந்திருக்காங்கன்னு கேட்டு தொந்தரவு செய்யுறாங்க மிகவும் வருத்ததுடன் தெரிவித்தனர்.

அவரது தயார், ”மகளை நினைச்சு அழுதாக்கூட சத்தமில்லாமத்தான் அழ வேண்டியதா இருக்கு” மிகவும் வருத்தத்துடன் தெரிவித்தார். மேலும், துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமான அதிகாரிகள், துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறையினர் மீது யாரும் எவ்வித நடவடிக்கையும் இப்போ வரைக்கும் எடுக்கலை.

இந்தச் சம்பவம் தொடர்பாக, விசாரணை கமிஷன் ஒன்றை அரசு அமைத்துள்ளது. அதில் இப்போ வரைக்கும் அந்த ஆணையத்தின் விசாரணையும் மந்தமாதான் இருக்கு. என் மகளைச் சேர்த்து, உயிரிழந்த 13 அப்பாவிகளின் உயிருக்கு அரசாங்கம் என்ன பதில் சொல்லப்போகுது?”என்றார் கண்ணீருடன் கதருகிறார்.