விவசாயப் பொருட்களுக்கு தடை தொடர்ந்தால்..? அதிர்ச்சி ரிப்போர்ட்

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் விவசாயம் பாதிக்கப்பட்டு உணவு உற்பத்தி தொழில் கடும் ஆபத்தில் உள்ளது.


அத்தியாவசிய உணவுப் பொருட்களான நெல், கோதுமை, காய்கறிகள் சரியான விளைச்சல் தந்தாலும் தற்போதைய சூழலில் அறுவடை செய்யப்படாமல் வீணாகிக் கொண்டிருக்கிறது. சரியான போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் நாடு முழுவதும் 30% க்கும் மேற்பட்ட பயிர்கள் அறுவடை செய்யப்படாமலும்.

ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட காய்கறிகள் விவசாயிகளின் வயல்களிலும் வீடுகளிலும் கொட்டி வைக்கப்பட்டுள்ளன என்று கவலையில் ஆழ்ந்துள்ளனர் விவசாயிகள்.

முட்டைக்கோஸ், காலிஃபிளவர் கேரட் பீட்ரூட் போன்ற அழுகும் காய்கறிகளை பயிரிட்டவர்கள் விவசாயிகள் நிலமை இன்னும் மோசமாகி வருகிறது. ஏனெனில் மேற்கண்ட காய்கறிகள் விவசாயிகளிடம் இருந்து கிலோ 10 ரூபாய்க்கு வாங்கும் மொத்த வியாபாரிகள் யாரும் வராத நிலையில். வேறு வழியின்றி கிலோ 1 ரூபாய்க்கு விற்பனை செய்து கலங்கிப் போயுள்ளனர் ஆந்திராவின் அனுமனஹள்ளி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் விளையும் காய்கறிகளை கொள்முதல் செய்ய வெளியூரிலிருந்து வியாபாரிகள் வராததால், தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், பாகற்காய், உள்ளிட்ட காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்

கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் கர்நாடகா முழுவதும் முலாம்பழம் திராட்சை, அன்னாசி, பப்பாளி மற்றும் தக்காளி போன்ற பழங்களை பயிரிட்ட விவசாயிகள். தங்களது பல மாதங்கள் கடின உழைப்பு மற்றும் முதலீடு வீழ்ச்சியடைந்து போவதைக் கண்டு நொந்து போயுள்ளனர். மேலும் தமிழகத்தின் வேலூர் பகுதியில் இருந்து பூக்கள் பயிரிட்ட வேர்களின் நிலமை இன்னும் மோசமாகி போயுள்ளது.

போக்குவரத்து முற்றிலுமாக முடங்கி போயுள்ளதாலும். பூக்கள் அறுவடைக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டதாலும். பயிரிடப்பட்ட அனைத்து மலர்களும் அழுகிப் போய் ரோட்டில் கொட்டப்பட்டு வருகிறது.

பொதுவாக 300 முதல் 350 சரக்கு வாகனங்களில் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு காய்கறிகள் வரும். ஆனால் தற்போது வெளி மாநில எல்லை முழுமையாக முடங்கிப் போயுள்ளதால்.தமிழகத்தின் உள் மாவட்டங்களான ஓசூர் திருநெல்வேலி மதுரை மார்க்கெட்டுக்கு செல்லும் காய்கறி வண்டிகள் அனைத்தும் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வர துவங்கியுள்ளன.

விவசாயிகளுக்கு ஏற்படும் வருமான இழப்பு குறித்து அதிகாரப்பூர்வ மதிப்பீடு எதுவும் இல்லை என்றாலும், இந்த ஊரடங்கு காலத்தில் மக்களின் சராசரி உணவு தேவை 40% அதிகரித்துள்ளதாக மாநில உணவு விநியோக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

வேளாண்மை மற்றும் தோட்டக்கலை விளைபொருட்களை சந்தைப்படுத்தலில் ஏற்பட்டுள்ள இடையூறு, அறுவடை செய்யப்பட்ட காய்கறிகளின் நிச்சயமற்ற தன்மை, மக்களின் தேவை அதிகரித்து, ஏற்றுமதி இறக்குமதி குறைந்துள்ளது போன்ற இயற்கைப் பேரிடர் தாக்குதலால்.

உணவு பாதுகாப்பு மற்றும் விநியோகம் முற்றிலுமாக முடங்கி போயுள்ளது. தற்போதைய ஊரடங்கு நெருக்கடியால் நாடு முழுவதும் உள்ள 70% விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் அமைப்புகள் கூறுகின்றன.

விவசாய தினக்கூலியை நம்பி வாழ்க்கையை நகர்த்தும் பலர். தங்களது வாழ்வாதாரம் முடக்கப்பட்டுள்ளதை எண்ணி. பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

மணியன் கலியமூர்த்தி