வாட்ஸ்ஆப் குழுவில் நிர்வாண வீடியோ! விரட்டியடித்த கணவன்! போராடி வென்ற மனைவி!

வாட்ஸ் ஆப் குழுவில் தனது மனைவியின் நிர்வாண வீடியோவை பார்த்து அவரை வீட்டில் இருந்து கணவன் விரட்டி அடித்துள்ளான். ஆனால் இந்த விவகாரத்தை அந்த பெண் எதிர்கொண்ட விதம் தற்போது பேசு பொருள் ஆகியுள்ளது.


கேரள மாநிலம் தொடுப்புழாவை சேர்ந்தவர் ஷோபா. 35 வயதான இவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். கணவர் பணிபுரியும் அலுவலகத்திலேயே ஷோபாவும் பணிபுரிந்து வந்தார். அந்த அலுவலகத்தின் ஊழியர்கள் வாட்ஸ் ஆப் குழுவில் ஷோபாவும், அவரது கணவர் மற்றும் பல ஊழியர்கள் இருந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு திடீரென ஒரு நாள் அந்த வாட்ஸ் ஆப் குழுவில் பெண் ஒருவரின் நிர்வாண வீடியோ வந்துள்ளது.



   பெண் ஒருவர் தான் குளிப்பதை தானே எடுத்து அந்த வீடியோவை வேறு ஒருவருக்கு அனுப்பி, அந்த வேறு ஒருவர் மூலமாக அந்த வீடியோ ஷோபவும், அவரது கணவரும் இருந்த வாட்ஸ் ஆப் குழுவிற்கு வந்துள்ளது. அந்த வீடியோவை பார்த்த சஜூ மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். காரணம் நிர்வாணமாக குளித்துக் கொண்டிருப்பது தனது மனைவி ஷோபா. இதனால் ஆத்திரம் அடைந்த சஜூ தனது மனைவி ஷோபாவை வீட்டில் இருந்து விரட்டியுள்ளார்.

   ஷோபா தனது ஆசை நாயகனுக்கு அந்த வீடியோவை எடுத்து அனுப்பியதாகவும் அவன் தான் அந்த வீடியோவை வாட்ஸ் ஆப் குழுவில் பகிர்ந்ததாகவும் கணவன் சஜூ குற்றஞ்சாட்டியுள்ளான். ஆனால் ஷோபாவுக்கு அந்த வீடியோவை பார்த்தது முதல் அதிர்ச்சியாக இருந்துள்ளது. காரணம் வீடியோவில் இருப்பது தன்னை போன்றே இருந்தாலும் அது தான் இல்லை என்பதில் அவர் உறுதியுடன் இருந்துள்ளார்.

   எவ்வளவோ மன்றாடியும் ஷோபாவை அவரது கணவன் சஜூ நம்பவில்லை. இதனை தொடர்ந்து காவல் நிலையம் சென்ற ஷோபா, அந்த வீடியோவில் இருப்பது தான் இல்லை என்பதை நிரூபிக்க ஒரு வருடமாக சட்டப்போராட்டம் நடத்தினார். இறுதியாக டெல்லியில் உள்ள அகில இந்திய தடயவியல் சோதனை ஆய்வு மையம், வீடியோவில் இருந்து ஷோபா இல்லை என்று அறிக்கை கொடுத்துள்ளது.

   தன்னை போன்ற ஒரு பெண்ணின் வீடியோவை பார்த்து தனது கணவன் தன்னை தவறாக நினைத்து விரட்டியடித்துவிட்டதாக தற்போது கண்ணீர் மல்க ஷோபா பேட்டி அளித்துள்ளார். மேலும் கடந்த ஓராண்டாக தனது மூன்று குழந்தைகளையும் தனது கணவன் தன்னை பார்க்க அனுமதிக்கவில்லை என்று வேதனையுடன் ஷோபா தெரிவித்துள்ளார். தற்போது தான் நிரபராதி, அந்த நிர்வாண வீடியோவில் இருப்பது தான் இல்லை என்பது உலகிற்கு உறுதியாகிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.



   தன்னை தனது கணவர் மட்டும் அல்ல தனது குழந்தைகளும் தவறாக நினைத்துவிடக்கூடும் என்பதால் தான் ஓராண்டாக போராடி தற்போது நீதியை வென்றுள்ளதாகவும் ஷோபா தெரிவித்துள்ளார். பிரச்சனை என்றதும் வீட்டில் முடங்கி விடாமல், தன் மீது தவறு இல்லை என்பதை ஓராண்டாக போராடி நிரூபித்த ஷோபா தற்போது கேரளாவில் மட்டும் அல்ல பல்வேறு பெண்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார். Pic Courtesy: Malayala Manoram