ஆயுஷ் என்பது ஆயுர்வேதிக், யோகா, நேச்சுரோபதி, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி என்ற இவை அனைத்தும் சேர்ந்து அளிக்கப்படும் சிகிச்சை முறை.
ஆயுஷ் மருத்துவத்துக்கு மாறலாமா..? இந்தியாவின் தொன்மையான மருத்துவம் இதுதாங்க.

நமது நாட்டின் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களே கொரோனா போன்ற ஆட்கொல்லி நோய் தடுப்பிற்கு ஆயுஷ் மருத்துவமுறையை பரிந்துரை செய்வது பற்றி கலந்து ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்.
ஆயுர்வேத மருத்துவமுறையில் நம் இந்தியாவிற்கு எப்பவுமே தனி இடம் உண்டு. நமது உடலுக்கு ஊட்டச்சத்து மிகவும் முக்கியம், ஆனால் இன்றைய உணவுமுறைகளால் நம் சில பழமையான மருத்துவமுறைகளை எடுத்துக் கொள்ளமுடியாமல் போய்விட்டது.
ஆயுர்வேதிக் சிகிச்சை முறைகள், நல்ல உணவுப்பழக்கத்துடன் பின்பற்றும் போது உடல்சீராக இயங்கும் மற்றும் அனைத்து நோய்களில் இருந்தும் நம்மை காத்துக் கொள்ள முடியும். இது போன்ற மாற்றுமுறை மருத்துவமுறையை உலகில் உள்ள 60% மக்கள் பின்பற்றுவது ஆச்சர்யத்திற்க்குரியது.
இது கிராமப்புறத்தில் மட்டுமல்லாது பிற உயர் கலாச்சார நாடுகளிலும் பின்பற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மட்டும் 70% கிராம மக்கள் ஆயுர்வேதிக் மருந்துகளை உட்கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நமக்கு மிகவும் சவாலான கொரோனா வைரசையே ஆயுர்வேதிக் மருந்துமூலமாக சிகிச்சை அளிக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆயுர்வேதிக் மருந்துடன் SESAME ஆயில், துளசி, மஞ்சள், இஞ்சி ஆகியவற்றை உணவுடன் சேர்த்துக் கொள்வது மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. இன்று நாம் இருக்கும் சூழ்நிலையில் கை கழுவுவதும், சமூகத்தில் தனித்திருப்பதும், உடல்நிலை சரியில்லாத போது தனிமைப்படுத்தி இருக்கும் போதும், குளிர்ச்சியான மற்றும் உறைநிலையில் சேமிக்கப்பட்ட உணவுப் பொருட்களை தவிர்ப்பது மட்டுமல்லாது யோகா மற்றும் பிராணாயமா போன்ற மூச்சு பயிற்சிகளையும் சேர்த்து செய்வது பயனுள்ளதாக அமைகிறது.
· சித்தா மருத்துவமுறை நம் உடலில் நாடி பிடித்து சிகிச்சை அளிக்கும் பழமையான வைத்திய முறையாகும்.
· NATIONAL INSTITUTE OF SIDDHA (2018-2019)–தகவலின் படி தினமும் 2000 நோயாளிகள் சித்தா முறையில் சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள். நம் இந்தியாவில் சித்த மருத்துவ முறைக்கு 8 ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளன, அவற்றில் 3 தமிழ்நாட்டிலும், டில்லியிலும், புதுச்சேரி, கேராளாவிலும், கர்நாடகா, ஆந்திராவிலும் முறையே ஒன்றாக அமைந்துள்ளது.
· கிரீஸ் நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட யுனானி மருத்துவமுறை இப்போது நம் இந்தியாவிலும் அதிகம் பின்பற்றப்பட்டு வருகிறது.
· ஹோமியோபதி சிகிச்சைமுறையும் நம் நாட்டில் பெருமளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நம் நாட்டில் அதிகமாக பயன்படுத்தும் சிகிச்சை முறைகளில் முதலாவதாக அலோபதி சிகிச்சை முறையும், இரண்டாவதாக ஆயுர்வேத சிகிச்சை முறையும், மூன்றாவதாக ஹோமியோபதி சிகிச்சை முறையும் உள்ளது.
வரும் காலங்களில் ஆயுஷ் சிகிச்சை முறையைப்பின்பற்றி பலவித கொடிய நோய்களை குணப்படுத்த முடியும்.
-A.T.C.MURUGESAN MPT(sports)
PHYSIOTHERAPIST