சென்னை: ''ஷூட்டிங் பிரேக்கில் ப்ளஸ் டூ பரீட்சைக்குப் படித்தேன்,'' என்று இரட்டை ரோஜா சீரியல் புகழ் ஷிவானி தெரிவித்துள்ளார்.
அதற்காக..! 78 கிலோ உடல் எடையை 58 கிலோவாக குறைத்தேன்! இரட்டை ரோஜா ஷிவானி கூறும் காரணம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் அறிமுகமாகி பல தரப்பிலும் பாராட்டுகளைப் பெற்றவர் ஷிவானி. தற்போது இவர், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இரட்டை ரோஜா சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவருக்கு அபி, அனு என இரட்டை வேடங்கள்.
இவர் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ''நான் தமிழகத்தின் சாத்தூரை சேர்ந்தவள். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது, குடும்பத்தோடு சென்னைக்கு இடம்பெயர்ந்தோம். வளர வளர எனக்கு நடிப்பு மீது தீராத ஆசை ஏற்பட்டது.
நான் படிக்கும் பள்ளி சார்பாக பலவித கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். தவிர, டிக் டாக், டப்ஸ்மாஷ் போன்றவற்றில் பல வீடியோக்கள் செய்து வெளியிட்டுள்ளேன். எனது வீடியோக்கள், சோஷியல் மீடியாவில் பயங்கர வைரலாகவே, பகல் நிலவு சீரியலில் வாய்ப்பு கிடைத்தது.
அப்போது நான் ப்ளஸ் டூ படித்து வந்தேன். ஷூட்டிங்கின் இடையே கிடைக்கும் ஓய்வு நேரத்தில் படிச்சித்தான், ப்ளஸ் டூ பரீட்சை எழுதினேன். தற்போது ப்ளஸ் டூ முடித்துவிட்டேன் எனக்கு 16 வயதாகிறது. சிரமப்பட்டு, எனது உடல் எடையை 78 கிலோவில் இருந்து 58 கிலோவாக குறைத்துவிட்டேன். எதிர்காலத்தில் சினிமாவில் நடிக்க விரும்புகிறேன்.
குறிப்பாக அதர்வா கூட நடிக்க வாய்ப்பை எதிர்பார்த்துள்ளேன்,'' எனக் குறிப்பிட்டுள்ளார்.