மதுரையில் இருந்து படிக்கத்தான் வந்தேன்! ஆனால் பிசினஸ் செய்ய வேண்டியதாகிவிட்டது! உருகும் நடிகை!

மதுரையிலிருந்து விஸ்காம் படிப்பதற்காக வந்தவர் தான் சாய் காயத்ரி.ஆனால் தற்போது "வீஜே, சின்னத்திரை நடிகை, ஈவன்ட் மேனேஜர், பிசினஸ் உமென்"எனப் பன்முககொண்டவராக திகழ்கிறார்.


இவர் தன்ஃ கல்லூரி காலத்தின் போதே வீஜேவாக அறிமுகமாகினார்.இதன் பின் விஜய் வீடியில் ஒளிபரப்பாகும் `கனா காணும் காலங்கள்' , `ஈரமான ரோஜாவே' சீரியலிலும், `சிவா மனசுல சக்தி' சீரியலிலும் இரண்டாவது கதாநாயகியாக நடித்து வருகிறார்.ஜெயா டிவியில் 'கில்லாடி ராணி' என்கிற ஸ்பெஷல் ஷோவை தொகுப்பதற்காக ஒப்பந்நம் செய்துள்ளார்.

இவருக்கு டான்ஸ் ரொம்ப பிடிக்கும் காரணத்தால் இவர் தற்போது சென்னை அண்ணா நகரில்  'லேட்ஸ் டான்ஸ் ஸ்டுடியோ' ( Lets Dance Studio ) என்கிற டான்ஸ் ஸ்டூடியோவை துவங்கி நடத்தி வருகிறார்.இந்த ஸ்டுடியோவில் 2 வயது குழந்தைகளுக்கு ஹிப் ஹாப் டான்ஸ் கற்றுத் தருகிறார் சாய் காய்த்திரி. 

படிக்க வந்த நிலையில் விடா முயற்சி மற்றும் தன்னம்பிக்கையால் தற்போது டிவி பிரபலம் மட்டும் அல்லாமல் பிசினஸ் உமனாகவும் மாறிவிட்டேன் என்கிறார் ஈரமான ரோஜோவே காயத்திரி.