படுத்து உருண்டு பதவி வாங்கினாராம் செந்தில் பாலாஜி! நமது அம்மா ஆவேசம்!

குனிந்து, வளைந்து பதவி வாங்கியவர்கள் அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்று சட்டமன்றத்தில் செந்தில்பாலாஜி பேசியதுமே, அமைச்சர் பெருமக்கள் அத்தனை பேரும் ஆவேசப்பட்டார்கள்.


ஏதோ, அவர்கள் எல்லோரும் உத்தமசீலர்களாக, நிமிர்ந்த நேர்கொண்ட பார்வை கொண்டவர்கள் போல கோபமானார்கள்.அந்தக் கோபத்தை இன்று நமது அம்மா பத்திரிகையில் காட்டவும் செய்திருக்கிறார்கள். மந்தியை முந்துவார், பச்சோந்தியை விஞ்சுவார் என்று செந்தில்பாலாஜி பற்றி குத்தீட்டி பெரிய மேட்டரே தட்டி விட்டிருக்கிறார்.

தாயை வணங்குவதற்கு குனிந்தது அவமானம் என்று சொன்னால், தினந்தோறும் குனிந்ததும், அம்மாவுக்காக தீச்சட்டி தூக்கியதும், அங்கப்பிரதட்சனம் என்று படுத்து உருண்டதம், அத்தனையுமே அமாவாசையின் நடிப்புதானா என்று கேள்வி எழுப்பியிருக்கிறது நமது அம்மா.

அரசியல் பிழைப்புக்காக இப்படியெல்லாம் நிறம் மாறும் இவரிடம் பச்சோந்தியும் தோற்றுப் போகும் என்பது நிச்சயம். அதுசரி, புதுத் துடைப்பம் நல்லாவே பெருக்கும் என்பது போல், தி.மு.க.வுக்கு பழைய ஆலே புது வரவாக இருக்கும் நிலையில், கொஞ்ச காலத்துக்கு ஓவரா கூவுவார் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதானே, வெட்கம் வெட்கம் என்கிறது நமது அம்மா.

ஏண்ணா, அம்மாவுக்காக நீங்க குனிந்தது தப்பு இல்லைன்னா, இவரு படுத்து உருண்டது மட்டும் எப்படின்னா தப்பாகும்?