மதுரை முழுவதும் கொண்டாட்டம்! செல்லூர் ராஜூ மருத்துவமனையில் இருந்து வருகிறார் …

கே.பி.அன்பழகன், தங்கமணி, வளர்மதி ஆகியோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகிய நேரத்தில் கலங்காத மக்கள், செல்லூர் ராஜூக்கு பாதிப்பு உறுதியானதும் கலங்கியே போனார்கள். விஞ்ஞானியிடமே வேலை காட்டுகிறதா கொரோனா என்று ஆவேசமாக மீம்ஸ்களை தெறிக்க விட்டனர்.


அந்த மீம்ஸ்களை தாங்கமுடியாமலோ என்னவோ, விரைவில் மருத்துவமனையில் இருந்து திரும்பிவிட்டார் செல்லூர் ராஜூ. இதனை மதுரை மக்கள் திருவிழா போன்று கொண்டாடி வருகின்றனர். ஆம், எதற்கெடுத்தாலும் போஸ்டர் அடிக்கும் மதுரை இதை மட்டும் சும்மா விடுமா.?

மதுரை முழுவதும், 'மதுரை மீண்ட சுந்தரபாண்டியரே' என அவரை வாழ்த்தி வரவேற்று போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். கோரோனா பற்றி அமைச்சர் செல்லூர் ராஜூ என்ன பேசுவார் என்பதை அறிந்துகொள்ள தமிழகமே ஆர்வத்துடன் காத்துக்கிடக்கிறது. .