திருமணமான கையோடு இளம் ஜோடிய அழைத்துச் சென்று சீமான் செய்த நெகிழ வைக்கும் செயல்!

தமிழகம் முழுவதும் ஏரிக் கரையோரங்களில் பனை விதை நடும் நிகழ்வில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டதோடு மட்டும் அல்லாமல் இன்று திருமணம் ஆன புது தம்பதியுடன் இணைந்து பனை விதைகளை நட்டது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் தமிழகம் முழுவதும் ஏரி கரையோரங்களில் 10 லட்சம் பனை விதைகளை நடுவதற்கு முடிவு செய்து அந்த கட்சிகள் அந்த பணியை செய்து வருகின்றனர். அதன்படி இன்று நடைபெற்ற பனைத் திருவிழாவில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை சோழிங்நல்லூர் அடுத்த நாராயணபுரம் ஏரிக்கரையில் தொண்டர்களுடன் பனை விதைகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இதற்கிடையே இன்று காலை திருமணம் செய்து கொண்ட சந்தோஷ் மஞ்சு தம்பதியினர் சீமானிடம் ஆசி பெற வந்தனர். சீமான் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர்களுடம் ஏரிக் கரையோரத்தில் பனை விதைகளை நட்டு வாழ்க்கையில் மறக்க முடியாத நாளை ஏற்படுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் பனை மரம் தமிழர்களின் தேசிய மரமாக உள்ளது. அது மண் அரிப்பை தடுத்து நிலத்தடி நீரை வளப்படுத்துகிறது. பனை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நிகழ்ச்சி நடத்துவதாக குறிப்பிட்டார். மேலும் சந்திராயன் 2 நிகழ்வு தோல்வி அடையவில்லை என்றும் நிலவுக்கு அருகில் லேண்டர் சென்றதே மிகப் பெரிய வெற்றிதான் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.