கமலஹாசனை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது! தேர்தல் பிரச்சாரத்தில் இரக்கப்பட்ட சீமான்!

திருவான்மியூரை அடுத்த கந்தன்சாவடி என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் தென்சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் ஏ.ஜே ஷெரினை ஆதரித்து சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.


பிரச்சாரத்தில் சீமான் பேசியதாவது: கமலஹாசனை பார்த்தால் பாவமாக உள்ளது. திரையில் நடிப்பதைப் போல செட்டு போட்டு நடித்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். பெண்களுக்காக போராடுவேன், ஊழலை ஒழிப்பேன் என நான் பேசிய அதைத்தான் அவர் பேசிக் கொண்டிருக்கிறார். எனக்காக கஷ்டப்பட்டு அவர் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்.

முன்னதாக சீமான் பேசுவதற்கு முன்பாக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுபாஷ் சந்திர் என்பவர் கன்னட மொழியில் நாம் தமிழர் கட்சிக்காக பேசி வாக்கு சேகரித்தார்.

அது பற்றி பின்னர் பேசிய சீமான் மேடையில் பேசிய சீமான் நாம் தமிழர் கட்சி எந்த மொழி பேசுபவரையும் பகைப்பதற்காக அல்ல.. நாங்கள் எல்லா மொழியையும் நேசிக்கிறோம் என்பதை காட்ட தான் இங்கே கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கன்னடரை பேச வைத்தேன் என விளக்கம் கொடுத்தார்.