அவன் ஒரு சின்னப் பையன்! சினிமா எடுக்கத் தான் லாயக்கு! ரஞ்சித்தை தெறிக்கவிட்ட சீமான்!

இயக்குனர் பா.ரஞ்சித் ஒரு சின்னப் பையன் என்றும் அவன் சினிமா எடுக்கத்தான் லாயக்கு என்றும் நாம் தமிழர் சீமான் ஆவேசமாக கூறியுள்ளார்.


சென்னையில் நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழகத்தில் ஜாதிக்கு எதிராக அவன் ஒருத்தன் மட்டும் தான் பேசுவது போல ரஞ்சித் பேசிக் கொண்டிருக்கிறான். ஜாதியை எப்படி ஒழிப்பது என்று நம்மிடம் அவன் கேள்வி கேட்கிறான். எங்கே ஜாதியை எப்படி ஒழிப்பது என்று ரஞ்சித்திடம் கேளுங்கள். அவனுக்கும் தெரியாது. எனக்கு தெரியாது என்றும் கூறுவான். எப்போது பார்த்தாலும் எங்களை ஒடுக்குகிறார்கள், ஒடுக்குகிறார்கள் என்று கூறுகிறானே தவிர உழைத்து முன்னேற வேண்டும் என்று கூற மறுக்கிறான் ரஞ்சித்.

சேரிகள் இருக்கிறது, தீண்டாமை இருக்கிறது. சரி அவற்றை எப்படி சரி செய்வது. அறிவியல் ரீதியாக முன்னேற்றம் வரும் போது அவை ஒழிந்துவிடும். மக்கள் பொருளாதார ரீதியில் முன்னேற ரஞ்சித் யோசிக்க வேண்டும். எப்போது பார்த்தாலும் எங்களை குறை சொல்லிக் கொண்டிருக்க கூடாது. அனிதா மரணத்திற்கு போராட வேண்டும் என்று அழைக்கிறான் ரஞ்சித். சரி இளவரசனுக்கு நாங்கள் அழுத போது எங்கே இருந்தான் ரஞ்சித். குறிஞ்சான் குளம் படுகொலை சம்பவத்தின் போது என்ன செய்து கொண்டிருந்தான் ரஞ்சித். அவன் என்னமோ பெரிய போராளி போல பேசிக் கொண்டிருக்கிறான்.

அவன் ஒரு சின்னப் பையன். சினிமா எடுப்பான் அவ்வளவு தான். அம்பேத்கரின் 2 மனைவிகளும் பிராமணர் என்பது ரஞ்சித்திற்கு தெரியுமா? ராம்விலாஸ் பாஸ்வானின் மனைவி எந்த ஜாதி? ஐஏஎஸ் அதிகாரி ஞானசேகரன் யாரை கல்யாணம் செய்துள்ளார்? முன்னேற்றம் வந்தால் ஏற்றத் தாழ்வு நீங்கிவிடும். இவ்வாறு சீமான் ரஞ்சித்திற்கு பதில் அளித்துள்ளார். இதற்கு ரஞ்சித் பதில் அளிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.