பிரசவ வலியின் 2வது கட்டம் இப்படித்தான் இருக்கும்!!

பிரசவ வலி அடுத்தகட்டத்தை அடையும்போது மிகவும் கூடுதல் வலி கொடுப்பதாக இருக்கும். அத்துடன் வலியானது 40 முதல் 60 நொடிகள் வரை நீடிக்கக்கூடும். அதுபோலவே வலியானது 3 முதல் 5 நிமிடங்கள் வரை தொடர்ந்து இருக்கலாம். கடுமையான வலி ஏற்படுவதுதான் பிரசவ வலியின் இரண்டாவது கட்டமாகும்.


·    அதிக வலியின் காரணமாக மூச்சு விடுவதற்கு சிரமமாக இருக்கும். இந்த நேரத்தில் முதுகுவலியும் அதிகமாக இருக்கும்

·    அதிக களைப்பு ஏற்படுவதுடன் கால்களில் திடீரென அதிகமான சுமை ஏற்பட்ட உணர்வு ஏற்படும்.

·    பனிக்குட நீர் முழுமையாக வெளியேறுவதுடன் வலியுடன் கூடிய ரத்தப்போக்கும் இருக்கலாம்.

·    இந்த நேரத்தில் வலி அதிகமாக இருந்தால் வலி நிவாரண மாத்திரை வழங்கப்படும். அதேபோல் வலி நீக்குவதற்கு எபிடியூரல் உபயோகிக்கப்படுவதும் உண்டு..

இந்த நேரத்தில் கர்ப்பிணியின் ரத்த அழுத்தம், கர்ப்பப்பை வாய் திறப்பு போன்றவை பரிசோதனை செய்யப்பட்டு முழுமையாக கண்காணிக்கப்படும். அதனால் எந்தக் காரணம் கொண்டும் கவலையோ அச்சமோ தேவையில்லை. இந்த நேரத்தில் கர்ப்பப்பையின் வாய் 10 செ.மீட்டருக்கு மேல் திறந்து குழந்தையை வெளியே அனுப்ப தயாராகிவிடும்.