சட்ட பஜாரின் சுளீர் கணிப்பு! மோடிக்கு எத்தனை சீட் தெரியுமா?

சட்ட பஜார் என்றால் சாமான்ய மக்களுக்குத் தெரியாது. ஆம், அது ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மர் பாலைவனத்தில் உள்ள பலோடி என்ற இடத்தில் நடைபெறும் சட்டத்துக்குப் புறம்பான தேர்தல் சூதாட்டம்.


இந்த தேர்தல் சூதாட்ட சந்தையில் யாருக்கு எத்தனை சீட் என்பதை ஆளும் பா.ஜ.க. கட்சியின் துக்ளக் பத்திரிகை 1.5.2019 இதழில் வெளியிட்டுள்ளது. தேர்தல் சூதாட்டம் நடைபெறும் சந்தை இருப்பது பற்றி விளக்குவதற்காக வெளியிட்டுள்ளதாக அந்தப் பத்திரிகை கூறியுள்ளது.

அதன்படி 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெற்றால் 1 ரூபாய்க்கு 1 ரூபாய் என்றும், காங்கிரஸ் வெற்றி பெற்றால் 1 ரூபாய்க்கு 10 ரூபாய் என்ற அளவிலும் பெட்டிங் பலோடி சந்தையில் நடக்கிறதாம். பலோடி சந்தை எடுத்திருக்கும் லேட்டஸ்ட் அதாவது 15.4.2019 வரையிலும் எடுத்துள்ள கணிப்புப்படி பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பெறுமாம்.

அதாவது பா.ஜ.க. கட்சிக்கு 350 இடங்கள் கிடைக்கும் என்றும் மோடி பிரதமராக மீண்டும் பதவியில் அமர்வார் என்றும் குறிப்பிடுகிறது. கோடிகளில் புரளும் வியாபாரம் என்பதால், எக்ஸிட் போல் கணிப்புப்படி துல்லியமாக இருக்கும் என்கிறார்கள்.

கடந்த 2018ல் நடந்த 5 மாநிலத் தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றால் 1 ரூபாய்க்கு 11 ரூபாய் என்று சொன்னதாம். அதாவது பா.ஜ.க. வெல்வது கடினம் என்று சொன்னதாம். பலோடி கணித்தபடியே பா.ஜ.க. தோல்வி அடைந்ததாம். அதனால் இந்த முறை பா.ஜ.க. வெல்லும் என்று துக்ளக் பத்திரிகை பலோடியின் கணிப்பை வெளியிட்டுள்ளது.