பாஸ் ஆக்குவதாக கூறி 20 வயது மாணவியை கர்ப்பம் ஆக்கிய ஆசிரியர்! அதிர வைக்கும் சம்பவம்!

ஜம்மு: 20 வயது மாணவியை அம்மாவாக்கிய பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.


ஜம்மு காஷ்மீர் மாநிலம் உத்தம்பூர் மாவட்டத்தில் உள்ள பிராரி பகுதியில் செயல்படும் அரசுப் பள்ளியில் சுபாஷ் சிங் என்பவர் ஆசிரியராக பணிபுரிகிறார். இவரிடம் 20 வயது பெண் ஒருவர் ட்யூசனுக்கு சேர்ந்துள்ளார்.

பல வருடங்களாக பத்தாம் வகுப்பில் அந்த மாணவியால் தேர்ச்சி பெற முடியவில்லை. இதனால் தன்னை 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற வைக்க உதவும்படி மாணவி கேட்டுள்ளார். இதனை பயன்படுத்தி அந்த பெண்ணை அவர் சில நாட்களாக பாலியல் சில்மிஷம் செய்து வந்திருக்கிறார். 

சில நாள் முன்பாக, அந்த பெண் தனக்கு வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து, மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது அந்த பெண் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரியவந்தது.

அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உண்மையை கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்தனர். இதன்பேரில் போலீசில் புகார் அளிக்க, அவர்கள் உடனடியாக ஆசிரியர் சுபாஷ் சிங்கை கைது செய்துள்ளனர்.