விரைவில் அரசியல் பிரவேசம்! பிரபல நடிகரின் மகள் அதிரடி அறிவிப்பு! யார் தெரியுமா?

சென்னை: ''விரைவில் நான் அரசியலில் களமிறங்குவேன்,'' என்று நடிகர் சத்யராஜின் மகள் தெரிவித்துள்ளார்.


நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, ஊட்டச்சத்து நிபுணராக பணிபுரிந்து வருகிறார். அக்‌ஷய பத்ரா என்ற உலகின் மிகப்பெரிய மதிய உணவுத் திட்டத்தின் பிராண்ட் அம்பாசிடராகவும் திவ்யா உள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு, அவர், பிரதமர் மோடிக்கு மருத்துவத் துறையில் நடைபெறும் சட்டமீறல்கள் குறித்து நேரடி கடிதம் ஒன்றை எழுதி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.  இதன்மூலமாக, இந்திய அளவில் கவனம் பெற்ற திவ்யா, தற்போது அரசியலில் இறங்க திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார். 

இதுபற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ள திவ்யா, ''இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். எனது முதன்மைக் கனவு இதுதான். அத்துடன், அரசியலில் எனக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. குறிப்பாக, வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைப்பதில்லை.

அவர்களுக்கு சரியான சுகாதார சேவையும் கிடைப்பதில்லை. இந்த விசயம் எனக்கு மிகவும் உறுத்தலாக உள்ளது. எத்தனை ஆட்சியாளர்கள் வந்தாலும், இந்நிலை மாறவில்லை. இதை சரிசெய்வதற்காகவே, நான் விரைவில் அரசியலில் இறங்க திட்டமிட்டுள்ளேன்'', என்று தெரிவித்துள்ளார். 

முன்னதாக, அவர் திமுக.,வில் இணைய உள்ளதாக, தகவல் கூறப்பட்டு வந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.