சசிகலாவுக்கு மீண்டும் மீண்டும் ஜெயில்? இனிமே வெளியே வரவே மாட்டாங்களாம்!

மோடி திடீரென பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்ததும், பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல், பணத்தை மாற்ற முடியாமல் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் பெரும் அவஸ்தைக்கு ஆளானார்கள்.


அந்த நேரத்தில் தங்கள் வசம் இருந்த 1,600 கோடி பழைய நோட்டுகளுக்கு சசிகலா குரூப் சொத்துக்களை வாங்கிக் குவித்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

கிருஷ்ணபிரியா வீட்டில் நடந்த சோதனையின்போது, அவரது செல்போனில் இருந்த ஒரு துண்டு சீட்டு தகவலில்தான் இந்த சொத்துக்களுக்கான ஆதாரம் இருந்ததாக சொல்லப்படுகிறது. அந்த ஆதாரத்தைப் பின்பற்றிச் சென்றபோது எங்கெல்லாம் எப்படியெல்லாம் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

பான்ஜின் பான்ஹெர் நிறுவனத்தின் உரிமையாளருக்கு சொந்தமாக புதுச்சேரியில் லட்சுமி ஜூவல்லரி உள்ளது. மேலும் இவருக்கு சொந்தமாக புதுச்சேரியில் ஓசேன் ஸ்பிரே என்ற பெயரில் ரிசார்ட் வாங்கப்பட்டுள்ளது. 

அதேபோல், பிரபாத் குரூப் நிறுவனங்களின் இயக்குனர் சிவகன் பட்டேலுக்கு சொந்தமான தூத்துக்குடியில் இருந்த 137 ஏக்கர் யார்டு ரூ200 கோடிக்கும், தேனியில் இருந்த 1897 ஏக்கர் எஸ்டேட் ரூ100 கோடிக்கும் அதே காலகட்டத்தில் வாங்கப்பட்டுள்ளது. மேலும் எண்ணூரில் உள்ள 16.6 ஏக்கர் யார்டு, ரூ60 கோடிக்கும், காஞ்சிபுரத்தில் உள்ள சர்க்கரை ஆலை ரூ450 கோடிக்கும் வாங்கப்பட்டுள்ளது. சர்க்கரை ஆலையை ரூ386 கோடிக்கும், மேற்கண்ட மற்ற சொத்துகளை வாங்க பேரம் பேசப்பட்டது. 

கோவையில் உள்ள செந்தில் என்ற பேப்பர் நிறுவனம் ரூ600 கோடிக்கு வாங்கப்பட்டது. இதில் ரூ400 கோடி செல்லாத நோட்டுகளாக கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் கங்கா பவுண்டேசன் இயக்குனர் செந்தில் குமாருக்கு சொந்தமாக ஸ்பெக்ட்ரம் மால் இருந்தது. இதை ரியல் எஸ்டேட் புரோக்கர் ஒருவர் மூலம் இளவரசி மகன் விவேக், 190 கோடி ரூபாய்க்கு பேரம் பேசினார்.

இதில் 130 கோடி ரூபாய் செல்லாத நோட்டுகளாக கொடுக்கப்பட்டது. முதலில் ஸ்பெக்ட்ரம் மால் சசிகலா தரப்புக்கு விற்க உரிமையாளர் முன்வரவில்லை. பின்னர் மிரட்டும் விதமாக பொதுப்பணித்துறை, தீயணைப்பு துறை, சென்னை மாநகராட்சி, சிஎம்டிஏ அதிகாரிகள் மாலில் ஆய்வு மேற்கொண்டனர். இதன்பின் அந்த மாலை விற்க உரிமையாளர் முன்வந்துள்ளார்.

மதுரையில் மிலான் என்ற பெயரில் டெக்ஸ்டைல் வைத்திருப்பவர் அமர்லாஜ் ஓரா. இவருக்கு மதுரை கே.கே.நகரில் மிலனம் என்ற மால் இருந்தது. அந்த மாலும் வாங்கப்பட்டுள்ளது. 

இப்படி பண மதிப்பிழப்பு நேரத்தில் ரிசார்ட், ஷாப்பிங் மால், எஸ்டேட், சர்க்கரை ஆலை, பேப்பர் ஆலை என பல நிறுவனங்களை சசிகலா மிரட்டி வாங்கி குவித்திருப்பதால், அவர் மீது கறுப்புப்பணம், பினாமி ஆக்ட் படி நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறதாம். அந்த வகையில் சசிகலாவுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும் என்கிறார்கள்.

அதனால், மீண்டும் சிறை தண்டனை பெற இருக்கும் சசிகலா, இனி வெளியே வரவே முடியாது என்பதுதான் லேட்டஸ்ட் நிலவரம்.