சரவணபவன் அண்ணாச்சியின் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட ஜீவஜோதி வாக்குமூலம்! 2001ம் ஆண்டு நடந்தது என்ன?

தமிழகம் மட்டுமில்லாமல் மற்ற நகரங்களிலும் தன்னுடைய ஹோட்டல்களின் மூலம் கொடிகட்டி பறந்தார் சரவணபவன் அண்ணாச்சி/


தனது கணவரை கொன்ற ராஜகோபாலின் மீது கொலைக் குற்றம் சுமத்திய ஜீவஜோதி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் கடந்த 1994 ஆம் ஆண்டு சென்னையில் வேலை தேடி தனது சித்தப்பாவுடன் சென்னைக்கு வந்த ஜீவஜோதி ஊரில் அவர்களிடம் இருந்த சொத்தை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு சென்னையில் தொழில் தொடங்க வந்துள்ளனர்.

இதையடுத்து தனது சித்தப்பா தொழில் தொடங்காமல் சரவணபவன் ஹோட்டல் முதலாளியானா ராஜகோபாலிடம் பணத்தை கொடுத்து அதில் வரும் வட்டியை வைத்து வீட்டிற்கு தேவையான உதவிகளை செய்து வந்தார். இந்நிலையில் அசோக் நகரில் உள்ள சரவண பவன் ஹோட்டலில் தனது தந்தைக்கு ராஜகோபால் வேலை கொடுத்துள்ளார் அதுமட்டுமின்றி கே.கே நகரில் உள்ள சரவணபவன் ஊழியர் குடியிருப்பில் வசிக்கும் அவர் அனுமதித்ததாக கூறியுள்ளார். இந்நிலையில் தனது தம்பிக்கு டியூசன் எடுப்பதற்காக சாந்தகுமார் என்பவர் ஆசிரியராக வந்தார்.

அப்போது ஜீவஜோதியும் அந்த நபரும் முதலில் நண்பர்களாக பழகி வந்தோம் நாளடைவில் எங்களது நட்பு  காதலாக மாறியது இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தோம் இந்த முடிவை தனது தந்தையிடம் தெரிவித்த போது அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது எப்படியோ சரவணபவன் ராஜகோபாலுக்கு தெரியவந்தது. முன்பிலிருந்தே ராஜகோபாலுக்கு ஜீவஜோதியின் மீது ஒரு கண் இருந்துள்ளது. இதையடுத்து சரவண பவனில் இருந்து என் தந்தையும் நானும் வெளியே வந்து சென்னையில் உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறினோம் இதையடுத்து தனது தந்தை வேலைக்காக மலேசியா சென்றுவிட்டார்.

இதையடுத்து தானும் சாந்தகுமார் என்பவரும் காதலித்து வந்ததும் தனது தாயிடம் தெரிவித்தனர் அதற்கு அவரது தாய் நாங்கள் திருமணம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளார் இதையடுத்து இருவரும் அண்ணாநகரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டோம். இதையடுத்து தனது கணவரின் ஊரான மதுரைக்கு சென்றோம். அப்போது கணவரின் பெற்றோர்கள் தங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்நிலையில் திரும்பவும் தனது தாயுடன் சென்னை வேளச்சேரி பகுதியில் குடியேறினோம் அங்கு வேறு ஏதாவது தொழில் தொடங்கி நடத்திக் கொள்ளலாம் என நினைக்கும் போது தங்கள் கையில் எந்த பணமுமில்லை.இந்நிலையில் திரும்பவும் ராஜகோபாலை பணத்திற்காக அணுகினோம். அவர் தங்களுக்கு பண உதவி செய்து தங்களது நிறுவனத்தை தொடங்கி வைத்தார் .இதையடுத்து அடிக்கடி தன்னை சந்திக்க வந்துள்ளார் என்னுடன் போனில் அடிக்கடி பேசியுள்ளார்.

அவரது பேச்சுகள் தன்னை அச்சுறுத்துவதாகவும் என்னை மூன்றாவதாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து நான் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த ராஜகோபால் என் கணவரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினார் இந்நிலையில் கடந்த 2001ஆம் ஆண்டு ராஜகோபாலும் அவரது ஆட்களும் எங்களது வீட்டிற்கு வந்து எங்களை மிரட்டி சென்றனர். அப்போது அசோக் நகரில் உள்ள சரவணபவன் குடோனுக்கு எங்களை அழைத்து அவரும் அவரது அடியாட்களும் எனது கணவரை அடித்து உதைத்தனர்.

பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ளும் நோக்கில் ராஜகோபால் தொந்தரவு செய்துவந்துள்ளார். இது தொடர்பாக காவல் துறையில் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் திரும்பவும் ராஜகோபாலும் அவரது அடியாட்களும் வந்து தங்களை திருநெல்வேலிக்கு அழைத்து சென்றனர். அப்போது தன்னை மட்டும் தனியே விட்டுவிட்டு தனது கணவரை கொடைக்கானல் வரை அழைத்துச் சென்று அவரை அங்கேயே கொலை செய்து உடலை அங்கேயே புதைத்துவிட்டு வந்துவிட்டனர்.

இதையடுத்து தனது கணவரைக் காணவில்லை என போலீசில் புகார் அளித்தார் ஜீவஜோதி கடந்த நவம்பர் 10ஆம்  தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 1 அன்று கொடைக்கானலில் அடையாளம் தெரியாத நபர் பிணம் ஒன்று இருப்பதாக அவருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து கொடைக்கானல் சென்ற ஜீவஜோதி அது தன் கணவர் தான் என உறுதி செய்தார். இதையடுத்து ஜீவஜோதி அளித்த புகாரின் பேரில் ராஜகோபால் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி நிலையில் தற்போது அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜகோபால் உடல்நலக்குறைவால் இன்று அகால மரணமடைந்தார்.