ஓட்டலுக்கு முறுக்கு சுட வந்தவரின் மனைவி! கணக்குப் பார்க்க வந்தவரின் மகள்! சரவணபவன் அண்ணாச்சியின் லீலைகள்!

சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் பக்திமானாக வெளி உலகிற்கு காட்சியளித்தாலும் அவரது கடந்த காலம் மிகுந்த சர்ச்சைக்குரியதாகவே இருந்துள்ளது.


சரவணபவன் எனும் ஹோட்டலை துவக்கி தமிழகத்தின் மிக முக்கியமான தொழிலதிபர்களில் ஒருவராக ராஜகோபால் உயர்ந்து இருந்த காலகட்டம் அது. அப்போது அனைத்து ஓட்டல்களுக்கும் நேரடியாக சென்று உணவின் தரம் மற்றும் சுவையை பரிசோதிப்பது ராஜகோபாலின் வழக்கம்.

அந்த வகையில் கடந்த 1990களில் சென்னையில் உள்ள தனது சரவணபவன் ஹோட்டலுக்கு உணவை தரம் பார்க்க சென்ற போது அங்கு வந்திருந்த ஒரு பெண்மணியை பார்த்து காதல்வயப்பட்டார் ராஜகோபால். அந்தப் பெண்மணி யார் என்று விசாரித்தபோது ஹோட்டலில் முழுக்குப் போடும் ஊழியரின் மனைவி என்று ராஜகோபாலுக்கு தெரியவந்தது.

இதையடுத்து அந்தப் பெண்மணியின் கணவனை அழைத்து நேரடியாகவே கூறி உன்னுடைய மனைவி கிருத்திகா மீது எனக்கு ஆசை இருக்கிறது நான் அவளைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ராஜகோபால். இதனைக் கேட்டு அந்த முறுக்கு சுடும் ஊழியர் அதிர்ச்சியில் தலை சுற்றி போயுள்ளார். 

ஆனால் கிருத்திகாவும் தனது கணவனை விட்டுவிட்டு ராஜகோபால் உடன் வந்து விட்டார். உடனடியாக கிருத்திகாவை இரண்டாவதாக ராஜகோபால் திருமணம் செய்து வசிக்க ஆரம்பித்தார்.

இந்த நிலையில்தான் 2000 ஆண்டு வாக்கில் சரவணபவன் கணக்கு வழக்குகளை பார்த்து வந்த ஒருவரின் மகளாக ஹோட்டலுக்கு வந்து சென்றார் ஜீவஜோதி. ஜீவஜோதி கை மூன்றாவதாக திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று ராஜகோபால் துடியாய் துடித்தார்.

ஆனால் இதனை அறிந்த ஜீவஜோதி உடனடியாக தனது காதலன் பிரின்ஸ் சாந்தகுமாரை அவசரமாக திருமணம் செய்துகொண்டு ராஜகோபாலிடம் இருந்து தப்பித்து விட்டதாக நினைத்தார். ஆனால் திருமணத்திற்குப் பிறகும்  ஜீவஜோதியை ராஜகோபால் விடுவதாக இல்லை.

 ஜீஜோதியை மூன்றாவதாக திருமணம் செய்து கொள்ள ஜோதிடர் ஒருவர் ஆலோசனை கூறியதாக கூறி அவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை சமாதானப்படுத்த ராஜகோபால் முயன்றுள்ளார். ஆனால் அதற்கெல்லாம் பிரின்ஸ் ஒத்துக் கொள்ளாத காரணத்தினால் அவரை தீர்த்துக் கட்டும் அளவிற்கு சென்று தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகிறார் ராஜகோபால்.

இந்த இரண்டு சம்பவங்களுக்குப் பிறகு தான் ராஜகோபால் பக்திமானாக மாறினார். தூத்துக்குடி திருச்செந்தூர் அருகே ஏழுமலையானுக்கு மிக பிரம்மாண்டமான கோவில் கட்டி அங்கு வருபவர்களுக்கு எல்லாம் தற்போது வரை இலவசமாக அன்னதானம் செய்து வருகிறார். மேலும் கோவில் விழாக்கள் என்றால் சிறிதும் தயக்கமில்லாமல் காணிக்கைகளையும் நன்கொடைகளையும் அள்ளி வழங்குகிறார் ராஜகோபால்.

ஆனாலும் கூட பிறன்மனை நோக்கிய ஒரே காரணத்திற்காக அவர் வேண்டும் கடவுள் கூட ராஜகோபாலை கைவிட்டுவிட்டார். இதனால் தான் தற்போது அவர் ஆயுள் தண்டனை பெற்ற சிறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.