சரவணபவன் அண்ணாச்சியின் கடைசி ஆசை! ஒன்று சேர்ந்து நிறைவேற்றிய ஊழியர்கள்!

சரவண பவன் அண்ணாச்சியின் கடைசி ஆசையை ஹோட்டல் ஊழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நிறைவேற்றினர்.


ஜீவஜோதி கணவன் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ராஜகோபால் அண்ணாச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் இன்றி இன்று காலை அவர் உயிரிழந்தார்.

ஆனால் சரவண பவன் ஓட்டல் ஒன்று கூட இன்று மூடப்படவில்லை. உரிமையாளர் உயிரிழந்த நிலையில் அவரது சரவண பவன் ஓட்டல்கள் ஒன்று கூட மூடப்படாதது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தான் அனைத்து சரவண பவன் ஓட்டல் முன்பும் ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. அதில் தான் இறந்தாலும் கூட ஓட்டலை மூடக்கூடாது என்று அண்ணாச்சி ஆசை தெரிவித்ததாகவும் அதன் அடிப்படையில் ஓட்டல்கள் இன்று மூடப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.,

உரிமையாளர் உயிரிழந்த நிலையில் அதனை பொருட்படுத்தாமல் அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் அனைத்து சரவண பவன் கிளைகளும் இன்று செயல்பட்டன. இதனை சரவண பவன் அண்ணாச்சியின் குடும்பத்தினரும் உறுதிப்படுத்தினர்.

ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் மீது அண்ணாச்சி வைத்திருந்த பற்று தான் இந்த அளவிற்கு அவரது ஆசையை நிறைவேற்ற அனைவரும் ஒன்று சேர உதவியதாகவும் சொல்கிறார்கள்.