40 பேரை தேட முடியாமல் எடப்பாடியிடம் தஞ்சமடைந்த சரத்!! ராதிகா செம ஹேப்பி!

இந்தத் தேர்தலில் தனியாக 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி எங்கள் பலத்தைக் காட்டப்போகிறோம் என்று சொன்ன, அதே சரத்குமார் இன்று மெகா பல்டியடித்து மீண்டும் அ.தி.மு.கவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டார்.


 கடைசியாக அ.தி.மு.க. கூட்டணியில்தான் இருந்தார் சரத்குமார். மற்ற கட்சிகளை எல்லாம் பேச்சுவார்த்தைக்கு அழைத்த முதல்வர் எடப்பாடி, ச.ம.க.வை மதிக்கவே இல்லை என்று டென்ஷனாகி, தனியே நிற்பதாக பேட்டி கொடுத்தார்.

இப்படி சொன்னால் உடனே அ.தி.மு.க. ஓடோடி வரும், பொட்டி தரும் என்று கனவு கண்டார். ஆனால் அதன்பிறகும் அ.தி.மு.க. கண்டுகொள்ளவே இல்லை. 

தனியாக நிற்கப்போகிறேன் என்று சொன்னதுமே ராதிகாவிடம் இருந்து சரத்துக்கு எச்சரிக்கை வந்தது. காசுன்னு கை நீட்டுனா வெட்டிப்புடுவேன் என்று எச்சரிக்கை செய்தாராம். அவரது கட்சி நிர்வாகிகளும் சரத் போன் செய்தால் எடுக்காமல் தவிர்த்துவந்தனர். ஏனென்றால் பேசினாலே வேட்பாளர் என்று அறிவித்துவிடுவார் என்ற அச்சம்தான்.

40 பேரை தேடி தனியே நிற்க முடியாமல் திண்டாடிய சரத், மானம், மரியாதையை எல்லாம் விட்டு மீண்டும் அ.தி.மு.க.வைப் பார்த்து கண்ணடித்தார்.

சாதாரண லெட்டர்பேட் கட்சிகளைக்கூட விட்டுவிடாமல் பிடித்து வைத்துக்கொள்ளும் ஓ.பன்னீர்செல்வம், உடனே சரத்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பொட்டி விஷயத்தில் கறார் காட்டிவந்த சரத், குடுப்பதைக் குடுங்க என்று கெஞ்சும் நிலைக்கு ஆளானதால், சேர்த்துக்கொள்ள சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து எடப்பாடியையும் சந்தித்து ஆதரவு தெரிவித்துவிட்டார். வாங்கிய காசுக்கு வஞ்சனை இல்லாமல் இனி தேர்தல் நேரத்தில் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறாராம்.

எப்படியோ காசு தப்பிவிட்டது என்று ராதிகா தட்டிக்கொடுத்தாராம். 40 பேரைத் தேடும் கடும் நெருக்கடியில் இருந்து தப்பித்துவிட்டதாக சந்தோஷத்தில் இருக்கிறார் சுப்ரீம் ஸ்டார்.