பெண்களே அந்த 3 நாட்களில் வேண்டாம் சானிட்டரி நாப்கின்கள்! இதோ சில காரணங்கள்!

மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தப்படும் சானிட்டரி நாப்கின்களில் பல ஆபத்துகள் ஒளிந்திருக்கின்றன என ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.


பெண்கள் வயதுக்கு வந்தது முதல் மாதவிடாய் நிற்கும்வரை ரத்தத்தை உறிஞ்சி எடுக்கவும் சுகாதாரத்தைப் பேணவும் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் அந்த நாப்கின்கள் உண்மையிலேயே சுகாதாரத்தைப் பேணுகின்றனவா என்பதே கேள்விக்குறியாகி உள்ளது

அந்த காலத்தில் பெண்கள் துணிகளை பயன்படுத்தினர். ஆனால் அவற்றால் எந்த உடல்நலக் கேடும் ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை இந்நிலையில் நவீன நாகரிக உலகின் அடையாளங்களில் ஒன்றாக முளைத்துள்ள சானிட்டரி நாப்கின்களில் உள்ள டயாக்சின் எனும் நச்சுப்பொருள் கருப்பை தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது

இந்த நச்சுப் பொருள் கருப்பை வாய் வழியாக உள்ளே நுழைந்து கருப்பை, கருமுட்டை பை மட்டுமன்றி சிறுநீர் குழாய், மலவாய் உட்பட உடல் முழுவதும் வேகமாக பரவி விடுகிறது என்று கூறப்படுகிறது, இதனால் ஏற்படும் பாதிப்புகள் பட்டியலிடப்படுகின்றன

ஹார்மோன்களுடன் விளையாட தொடங்கும், சினைமுட்டை வளர்ச்சியை தடுக்கிறது, இனப்பெருக்க உறுப்பில் சமச்சீரற்ற வளர்ச்சி, சினைப்பையில் நீர்க்கட்டிகள், கருப்பை கட்டிகள், கருக் குழாய் கட்டிகள், கருப்பை வாய் புற்றுநோய், தைராய்டு, கல்லீரல் வேலையில் மாறுபாடு, ஒவ்வாமை, தோல் கருத்துப் போதல், அரிப்பு, வெள்ளைப்படுதல், தோல் நோய்கள், நீரிழிவு, மன அழுத்தம், கரு முட்டைப்பை புற்றுநோய் குழந்தையின்மை, மார்பக புற்றுநோய், கருவளர்ச்சி சிதைவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன

இவற்றை தூக்கி எறிந்தால் பல ஆண்டுகள் மண்ணில் கிடந்து பாதிப்புகளை ஏற்படுத்தும் வெற்றி எரித்தாலும் நிலம் நீர் காற்று ஆகியவற்றின் பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவே நாப்கின்களை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது என்கின்றனர் ஆய்வாளர்கள்