தானாக நகர்ந்த சக்கர நாற்காலி! ஹாஸ்பிடலில் நிதக்ஷகழ்ந்த திக்திகில் சம்பவம்!

பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் மருத்துவமனையில் நோயாளிகள் பயன்படுத்தும் நாற்காலி யாருடைய உதவியும் இல்லாமல் தானாக நகர்ந்து சென்ற காட்சிகள் அங்கிருப்பவர்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது.


பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் முதுநிலை மருத்துவப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு நோயாளிகள் பயன்படுத்தும் சக்கர நாற்காலி ஒன்று திடீரென பின்னால் நகர்ந்தது. பின்னர் அடுத்த விநாடிகளில் முன்னோக்கி சென்றது. மெதுவாக யாரோ தள்ளிக் கொண்டு போவது போல முன்னோக்கி சென்ற அந்த சக்கர நாற்காலி மருத்துவமனையின் வாயில் படிக்கட்டில் மெதுவாக இறங்கி சாலை நோக்கி சென்றது.

சிறிது தூரம் சென்றபின் அங்கேயே நின்றுவிட்டது. இதை அங்கிருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயினர். இந்தக் காட்சிகள் மருத்துவமனை சிசிடிவி கேமராக்களிலும் தெளிவாக பதிவாகி உள்ளது. இதுகுறித்து சிலர் தெரிவித்தபோது ஒருவேளை பேட்டரி பொருத்தப்பட்ட நாற்காலியாக இருக்கலாம்.

யாராவது ரிமோட்டில் இயக்கியிருப்பார்கள் என்று தெரிவிக்கின்றனர். சிலர் நாற்காலியில் கண்ணுக்கு தெரியாத மெல்லியி பிளாஸ்டிக் இழையை கட்டி இழுத்து சென்று இப்படி ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கலாம் என கூறினர். 

ஒரு சிலர் காற்றின் வேகம் காரணமாகவும் மருத்துவமனை தாழ்வாரம் மிருதுவான மொசைக் டைல் என்பதாலும் நாற்காலி நகர்ந்து சென்றிருக்கலாம் என கருத்து தெரிவிக்கின்றனர்.

பொதுவாக ஒரு பொருள் எந்த ஆதரவும் இல்லாமல் அசைந்தாலே நம் மக்களுக்கு அது கடவுள் சக்தி அல்லது பேய் என்றே நினைப்பதுண்டு. அந்த அளவுக்கு சினிமாவை பார்த்து பயந்து போய் உள்ளனர். அதுவும் மருத்துவமனை என்றால் சொல்லவே வேண்டாம். இறந்து போன ஆத்மாதான் அந்த நாற்காலியில் அமர்ந்து சென்றிருப்பதாக கருதி இருப்பர்.