வயிற்றின் அந்த பகுதியை முழுவதுமாக காட்டி போஸ்! கர்ப்பிணி நடிகை புகைப்படம் வைரல்!

ஹிந்தி மற்றும் தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையான சமீரா ரெட்டி தன்னை கலாய்த்த நெட்டிசன்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.


ஹிந்தி மற்றும் தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த  நடிகை சமீரா ரெட்டி தன்னுடைய மகப்பேறு காலத்தை மிகச் சிறப்பாக கொண்டாடி வருகிறார். சமீராவிற்கு திருமணம் ஆகி முதலில் 3 வயது மதிக்க தக்க குழந்தை ஒன்று உள்ளது. தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்து உள்ளார். 8 மாத கர்ப்பிணியாக இருக்கும் இவருக்கு சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் பழக்கம் உள்ளது.

கர்பம் தரித்தது முதல் தற்போது வரை தன்னுடைய எல்லா நினவுகளையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி கொண்டார் என்றே கூற வேண்டும்.  

இவர் தன்னுடைய விடுமுறை நாட்களை கணவர் மற்றும் குழந்தையோடு கோவாவில் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார். அப்போது அங்கு எடுத்து கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவு இட்டார்.

சில வாரங்களுக்கு முன்பு, தன் வயிற்றில் உள்ள குழந்தை தெரியுமாறு புகைப்படத்தை வெளியிட்டார். அதற்கு நெட்டிசன்கள் சமீராவை கண்டபடி கமெண்ட் செய்தனர். இதைப்பற்றி சற்றும் கண்டு கொள்ளாத சமீரா, தன்னை  கிண்டல் செய்தவர்களின் முகத்திரையை கிழிப்பதற்காகவே தற்போது மீண்டும் ஒரு புதிய பதிவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

கோவா கடற்கரையில் நீச்சல் உடையில் நின்று கொண்டு, தன்னுடைய வயிறு பகுதி மொத்தமாக தெரியும் விதமாக உள்ளது அந்த புகைப்படம். இன்னும் சொல்ல போனால் சற்று கவர்ச்சிகரமாக இருந்தது அந்த புகைப்படம். 

அதை பார்த்த ரசிகர்கள் மீண்டும் சமீராவை சீண்டும் விதமாக, "கர்பமாக இருக்கும் போது கூட இத்தகைய கவுச்சி தேவையா?" என கேள்வி எழுப்பி வருகின்றனர்.