சூப்பர் டீலக்ஸ் படத்தில் தகாத உறவு! சமந்தா கேரக்டர் குறித்து மாமியார் அமலா சொன்ன பகீர் தகவல்!

குடும்பத்தாருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சமந்தா கணவரை பிரிய உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அவரை பாராட்டி மாமியாரும், நடிகையுமான அமலா தெரிவித்துள்ளார்.


பாணா காத்தாடி மூலம் அறிமுகம் ஆகி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் 2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகரான நாகர்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் மாமனார் குடும்பத்துடன் அடிக்கடி பிரச்சனை ஏற்படுவதாக தகவல்கள் அரசல் புரசலாக வெளியானது.

இதனால் கணவர் நாகசைதன்யாவை பிரிய உள்ளதாகவும் ரசிகர்கள் மத்தியில் தகவல்கள் பரவின. அந்த தகவல்கள் உண்மை என்பது போல் மாமானார் வீட்டு நிகழ்ச்சிகளில் சமந்தா பங்கேற்பதில்லையாம். இதற்கிடையே சமீபத்தில் சமந்தாவின் மாமியாரும், நாகார்ஜூனாவின் மனைவியுமான அமலா ஒரு பேட்டி அளித்துள்ளார்.

அதில் விலங்குகள் மீது தனக்கு நிறைய ஆர்வம் இருப்பதாக தெரிவித்தார். ஐதராபாத்தில் ப்ளூ கிராஸ் அமைப்பை நடத்தி வரும் அமலா, கணவர் நாகர்ஜூனா தனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருப்பதாகவும், ப்ளூ கிராஸ் அமைப்பை தொடர்ந்து நடத்த நன்கொடை அளித்து வருவதாகவும் கூறினார். இதனிடையே தனது மருமகள் சமந்தா திறமையானவர் எனவும் சூப்பர் டீலக்ஸ் படத்தில் சமந்தாவின் கதாப்பாத்திரத்தை பார்த்து ரசித்ததாகவும் அமலா பெருமிதத்துடன் தெரிவித்தார்.

அதே சமயம் சமந்தாவின் ஆடை விஷயத்தில்தான் குடும்பத்தினர் கோபமாக இருப்பதாகவும் மற்றபடி வேறு எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்த அமலா, சமந்தா விவாகரத்து முடிவில் இருப்பதாக கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க மறுத்ததோடு மட்டுமின்றி அவரை பாராட்டியும் பேசியுள்ளார்.