சிங்கப்பெண் ரேவதிக்கு ஒரு ஜே போடுங்க..! காவல் துறையில் இப்படியும் ஒருவர்.

காவல் துறை என்றாலே எல்லோருக்கும் இரும்பு இதயம் மட்டும்தான் என்பதை உடைத்துக் காட்டியிருக்கிறார் ரேவதி. ஆம், சாத்தான்குளம் சம்பவத்தில் உள்ளதை உள்ளபடி ரேவதி மட்டுமே கூறியதாக மாஜிஸ்திரேட் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.


அவர் மாஜிஸ்திரேட்டிடம் கொடுத்த வாக்குமூலத்தில், "தந்தை மகன் இருவரையும் இரவு முழுவதும் அடித்தார்கள், லத்திகள் எல்லாம் ரத்த கரையாக இருந்தது, முதல் மாடியில் இருக்கும் டேபிள் முழுவதும், இரத்த கரையாக இருந்தது" என்று ரேவதி பேசியதை மாஜிஸ்திரேட் விடியோ சாட்சியாக பதிவு செய்துகொண்டார். 

"நான் சாட்சி சொன்னால் என்னை கொன்றுவிடுவார்கள் என்று எனக்கு பயமாக தான் உள்ளது.. இருந்தாலும் என் மனசாட்சியை மீற முடியவில்லை... அன்று காவல் நிலையத்தில் நடந்ததை நீதிபதி முன் சொல்லிவிட்டேன் " 

ரேவதி எப்படிப்பட்டவர் என்பதற்கு உதாரணமாக அவரது வீடு இருக்கிறது. ஆம், அந்த குடிசை வீட்டையும், ரேவதிக்கு போலீசில் வேலை கிடைத்த பொழுது அவரது சந்தோஷத்தையும் இதில் பாருங்கள்.

ரேவதிக்கும் அவரது குடும்பத்திற்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமையும்தான். ரேவதிக்கு ஒரு ஜே போடுங்க.