உங்கள் கணவரின் மூளை செத்துவிட்டது..! டாக்டர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்..!அந்த நிமிடம் மனைவி எடுத்த நெகிழ்ச்சி முடிவு! 14 பேருக்கு உயிர் கொடுத்த அற்புதம்!

சேலம் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் 14 பேருக்கு தானமாக வழங்கப்பட்டு மறுஉயிர் பெற்ற நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.


சேலம் மாவட்டம் ராஜாராம் நகரை சேர்ந்தவர் தான் சுரேஷ் . இவருக்கு சுமார் 50 வயது இருக்கும். சுரேஷ் மருத்துவக் காப்பீட்டு முகவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 19ம் தேதி அன்று சுரேஷ் ஒரு வேலை விவகாரமாக காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் விக்கிரவாண்டி அருகே சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.  

படுகாயம் அடைந்த அவரை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த சுரேஷ் மூளைச்சாவு அடைந்தார். இதனை அடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க சுரேஷின் மனைவி முன்வந்தார். 

இதனையடுத்து, தமிழ்நாடு உடல் உறுப்புதான ஆணையத்திடம் அனுமதி கேட்டனர். பின்னர், இதற்கான அனுமதி வாங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலம் சுரேஷின், இதயம், நுரையீரல், கண்கள், சிறுநீரகம், தோல், எலும்பு, மஜ்ஜை, கல்லீரல், கணையம் உள்ளிட்ட பாகங்கள் எடுக்கப்பட்டு பிற தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டன.   

மூளைசாவு அடைந்த சுரேஷின் மனைவின் இந்த முடிவினால் 14 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். மேலும், இந்த நெகிழ்ச்சி சம்பவத்தை அனைவரும் பாராட்டினர்.