நடு சாமத்துல என் தங்கச்சி கூட என்ன பேச்சு..! இளைஞனை விரட்டி விரட்டி குத்திய அண்ணன்!

சேலம் மாவட்டத்தில் தங்கையிடம் வாட்ஸ்ஆப்பில் பேசிய மாணவரை கத்தியால் குத்திய பரபரப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.


சேலம் மாவட்டம் கோட்ட மேட்டுப்பட்டியைச் சேர்ந்த ஹரிஹரன், அரசுக் கலைக்கல்லூரியில் பி.ஏ படித்து வருகிறார். இவரும் அதே கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். இதை தவறாக எடுத்துக்கொண்ட பெண்ணின் பெற்றோர் ஹரிஹரனின் பெற்றோரிடம் முறையிட்டுள்ளனர்.

அதை ஏற்றுக்கொண்ட அவர்களும் இனிமேல் அந்த பெண்ணிடம் பழகவேண்டாம் என ஹரிஹரனை கண்டித்துள்ளனர். இதையடுத்து சிறிது காலம் இருவரும் பேசாமல் இருந்துள்ளனர். இதற்கிடையே குடிபோதைக்கு அடிமையான மாணவியின் அண்ணன் சச்சினுக்கு ஹரிஹரன் மீது ஏற்பட்ட சந்தேகம் தீரவில்லை.

இருவரும் இன்னமும் பேசிக்கொண்டிருப்பதாக நினைத்து ஹரிஹரன் மற்றும் அவரது நண்பர் முரளிதரனை ஏரிப்பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளான். அங்கு என் தங்கையிடம் வாட்ஸ்ஆப்பில் பேசுகிறாயா என அசிங்கமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முரளிதரன் குடிபோதையில் இருந்த சச்சினை கண்டித்துள்ளார்.

பின்னர் சச்சின் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து ஹரிஹரன் மற்றும் முரளிதரன் இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குடிப்பழக்கம் குடியை கெடுத்தது மட்டுமின்றி கொலை முயற்சி வழக்கில் பல ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவிக்க அனுப்பி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.