மகள் கண் முன்னே தாய் மீது லாரியை ஏற்றி இறக்கிய கொடூர டிரைவர்! பதற வைக்கும் சிசிடிவி காட்சி!

சேலத்தில் சாலையில் நடந்து சென்ற ஆசிரியை மீது பின்னால் வந்த டிப்பர் லாரி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஆசிரியை சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இச் சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.


சேலம் மாவட்டம் தாரமங்கலம் மானாத்தாள் தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிபவர் கிறிஸ்டி அகஸ்டா ராணி. இவர் மாலையில் பள்ளி முடிந்து தன் மகளுடன் பேருந்து நிலையம் அருகே சாலையில் ஓரமாக நடந்து வந்துள்ளார், அப்போது அவர் பின்னே வந்த லாரி மோதி அவர் மீது மோதியது. அப்போது அதிர்ச்சியில் கீழே விழுந்த ஆசிரியை மீது லாரியின் முன் சக்கரம் ஏறி இறங்கியது சம்பவ  இடத்திலேயே ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார்.

மகளின் கண் முன்னே அந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தபோது  அவரது மகள் அழுதபடியே அருகில் நின்றிருந்தாள். லாரி ஓட்டுனர் எதிரே வந்த பேருந்துக்கு வழிவிட லாரியை ஓரம் கட்டி உள்ளார் ,லாரியில் பாரம் அதிகமாக இருந்ததால் பிரேக் பிடிக்க தடுமாறியதாலும் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்து நடந்ததும் கண்டுகொள்ளாமல் லாரி ஓட்டுனர் சிறிது தூரம் லாரியை ஓட்டிச் சென்று பின்னர் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து செம்மண் லோடுடன் இருந்த லாரியை கைப்பற்றினர். லாரி நம்பரை வைத்து  ஓனர் யார் என்பதையும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து ஆசிரியையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரியை கைப்பற்றிய போலீசார் தப்பியோடிய ஓட்டுனரை தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது இந்த விபத்திற்கான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.