அடுத்த தெருவுக்கு போனாலும் ஹெல்மெட் போடனுமா? மக்களை கதறவிடும் போலீஸ்! எந்த ஊர் தெரியுமா?

தலைக்கவசம் அணியாமல் சென்ற நபர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


சேலம் மாவட்டத்தில் தாரமங்கலம் எனுமிடம் அமைந்துள்ளது. நேற்று ராயல் என்ஃபீல்டு இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் இளைஞர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். போக்குவரத்து காவல்துறையினர் அவரை மடக்கிப்பிடித்தனர். தலைக்கவசம் எங்கே என்று கேட்டதற்கு தன்னை உள்ளுர்க்காரன் என்று அடையாளப்படுத்தி கொண்டுள்ளார். உள்ளூர்காரனுக்கு தலைக்கவசம் அவசியமில்லை என்று அவர் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

மேலும் தன் மீது வழக்குகள் நிறைய கிடப்பதாகவும், அதனால் இந்த வழக்கு ஒன்றும் புதிதல்ல என்றும் கூறியுள்ளார். தலைக்கவசம் அணியாதது மட்டும் தான் வழக்கா என்று கேள்வி எழுப்பிய அவரிடம் காவல்துறையினர், "உள்ளூர்க்காரன் என்றால் காட்டுக்குச் செல்லும் போது நடந்து செல்ல வேண்டியதுதானே" என்று கூறுகின்றனர்.

இந்த சம்பவத்தின் வீடியோவானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.