நாமக்கல் மாவட்டத்தில் லாரி ஓட்டுநரிடம் விபச்சாரத்தில் ஈடுபட்ட திருநங்கைகள் அவரிடம் இருந்த மொத்த பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.
52 வயதில் சபலம்! ஒரே நேரத்தில் 3 திருநங்கைகளுடன் உல்லாசம்! சேலம் லாரி டிரைவருக்கு பிறகு அரங்கேறிய பரிதாபம்!
நாமக்கல் மாவட்டம், தத்தாதிரிபுரம் அருகே, குருவங்காட்டை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவர் ராசிபுரத்திலிருந்து பழைய பேப்பர்களை ஏற்றிக் கொண்டு சென்னைக்கு சென்று கொண்டிருந்தார்.
உடையாப்பட்டி பிரிவு அருகே வந்த அவர் லாரியை ஓரமாக நிறுத்தி விட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருநங்கைகள் சுருதிகா, சஞ்சனா, நைனிகா ஆகியோர் பணம் தந்தால் உல்லாசமாக இருக்கலாம் என கூறியுள்ளனர். 3 பேருடன் உல்லாசமாக இருந்த ஓட்டுநர் பின்னர் அதற்கான பணத்தை திருநங்கைகளிடம் கொடுத்தார்.
அதே சமயம் லாரி ஓட்டுநரிடம் நிறைய பணம இருப்பதை தெரிந்து கொண்ட திருநங்கைகள் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் சட்டைப் பையில் வைத்திருந்த 15 ஆயிரம் ரூபாயை மிரட்டி பறித்துக்கொண்டு தலைமறைவாகி விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த லாரி ஓட்டுநர் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பின்னர் தகவல் அறிந்த மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் சித்ரா, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார், அப்போது அங்கு மீண்டும் ஆட்டோவில் வந்த திருநங்கைகளை பிடிக்க முயன்றபோது மறுபடியும் தப்பி ஓடினர். ஆட்டோ ஓட்டுநர் திருமுருகன் மட்டும் மாட்டிக் கொண்டார்.
இதை அடுத்து ஆட்டோ ஓட்டுநரிடம் முறையாக விசாரிக்க மற்ற 3 திருநங்கைகளும் போலீசாரிடம் சிக்கிக்கொண்டனர். அவர்களிடம் இருந்து லாரி ஓட்டுநரிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணம் கைப்பற்றப்பட்டது.