எந்த ஊருடி நீ..! உண்மையை சொல்லு! பெற்றோர் முன்னிலையில் இளம் பெண்ணுக்கு திருநங்கையால் ஏற்பட்ட பயங்கரம்! அதிர்ச்சி காரணம்!

தனக்கு பேய் பிடித்திருப்பதாக பொய் கூறிய இளம் பெண் ஒருவர் திருநங்கை சாமியாரிடம் சிக்கி சின்னா பின்னமாக ஆன கதை சேலம் அருகே நடைபெற்றுள்ளது


சேலம் சுற்றுவட்டாரத்தில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் பேய் பிடித்திருப்பதாக கூறி ஒரு திருநங்கை சாமியார் அடிப்பது வலி தாங்க முடியாமல் பெண் கத்துவதுமாக அந்த வீடியோ உள்ளது.  

சேலம் கன்னங்குறிச்சியில் காளியம்மன் கோயிலில் அமாவசை, பவுர்ணமி நாட்களில் திருநங்கை சாமியார் ஒருவர் அருள்வாக்கு சொல்வது வழக்கம். இது மட்டுமின்றி பகுதிநேரமாக அங்கு பேய் விரட்டும் வேலையையும் பார்த்து வருகிறார்.

பேய் பிடித்ததாக கூறப்படும் நபர்களை இவர்களிடம் அழைத்து வருவர். இவர் அடிக்கும் அடியில் வலி தாங்க முடியாமல் அந்த பேய், அந்த நபரை விட்டு ஓடிவிடுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இளம்பெண் ஒருவரை இவரிடம் அழைத்து வந்து பேய் பிடித்திருப்பதாக உறவினர்கள் கூறுகின்றனர். உடனே அந்த திருநங்கை சாமியார் முன் பெண் அமரவைக்கப்படுகிறாள். அப்போது மயில் இறகால் அந்த பெண்ணை தடவும் சாமியார், தன்னுடைய கேள்விகளை ஆரம்பிக்கிறார். நீ எந்த ஊரு பேய்? உன்பெயர் என்ன?" என கேட்க அந்த பெண் தன் பெயரை சொல்கிறார். இதையடுத்து தன்னுடைய கையில் இருந்த பிரம்பால் அந்த பெண்ணை போட்டு அடிக்கிறார். உனக்கு பேய் பிடித்திருக்கிறதா என கேட்டு விளாசுகிறார்.

ஒருவழியாக அடி தாங்க முடியாமல் அந்த பெண்ணும், தனக்கு பேய் பிடித்திருப்பதை ஒத்துக்கொள்கிறார். பின்னர் திருநங்கை சாமியார் பேயை விரட்ட வேண்டும் எனக்கூறி பிரம்பால் மீண்டும் வெளுத்து வாங்க, வலியை பொறுக்க முடியாமல் அய்யோ என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு பேய் பிடிக்கவில்லை. பொய் சொன்னேன் என கூறுகிறார். இதனால் அனைவரும் அதிர்ந்து போகின்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த திருநங்கை ஏன் பொய் சொன்னாய் என்று மீண்டும் அடித்து துவைக்கிறார்.

பின்னர் அந்த பெண் நான் ஒருவரை காதலிக்கிறேன். எனது விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதனால்தான் பேய் பிடித்திருப்பதாக பொய்சொன்னேன் என்று கதையை முடிக்கிறார். பின்னர் அந்த திருநங்கை காதலனை மறந்து விடுவேன் என சத்தியம் செய் என மீண்டும் மிரட்டுகிறார். அதற்கு அந்த பெண்ணும் பயந்து பேய் சத்தியம் செய்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதை எல்லாம் பார்க்கும்போது தில்லுக்கு துட்டு படம் பார்த்த ஞாபகம் வருகிறது.