நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மத்தியில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருந்தாலும்,தமிழகத்தில் போட்டியிட்ட ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
தேர்தல் வெற்றி! ஆரம்பமானது திமுக அராஜகம்! அதிகாரிகளுக்கு சேலம் எம்பி கொலை மிரட்டல்!
இதற்கு மாறாக தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு எதிராக கூட்டணி அமைத்த திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது. குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த ஊரான சேலம் தொகுதியில் திமுக கட்சியை சேர்ந்த பார்த்திபன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று MP ஆனார்.
இந்நிலையில் வனக்காவலர் திருமுருகன் என்பவர் வனப்பகுதியில் கள தணிக்கைக்கு சென்ற காவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக MP பார்த்திபன் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் MP பார்த்திபன் மற்றும் அவரது சகோதரர்கள் உட்பட 4 பேர் மீது பணி செய்ய விடாமல் குறுக்கிட்டல்,கொலை மிரட்டல்,பொது சொத்தை சேதப்படுத்துதல் போன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு இருக்கையில் வழக்கு குறித்து MP பார்த்திபன் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,சேலம் தொகுதியில் தனக்கு நற்பெயர் உள்ளதாகவும், அதை கெடுத்து அவப்பெயரை உண்டாக்க சிலர் சதித்திட்டம் தீட்டி இம்மாதிரியான வழக்கை தொடுத்ததாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
இதற்கு எதிராக MP பார்த்திபன் அளித்த மனுவை ரத்து செய்யக்கோரி வனத்துறை அதிகாரிகள் சார்பில் கோப்புகள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது அரசியல் களத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.