அண்ணன்-தங்கை முறை! திருமணம் செய்து பெற்ற குழந்தை! சேலம் சலசலப்பு!

சேலம் மாவட்டத்தில் குழந்தை இறந்துவிட்டதாக கூறி உறவினர்களுக்கு விற்கப்பட்ட குழந்தையை தற்போது மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.


சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியில் தனது மகளுக்கு பிறந்த குழந்தையை உறவினர்களுக்கு விற்றுவிட்டு குழந்தை இறந்துவிட்டதாக நாடகமாடி உள்ளனர் பெண்ணின் பெற்றோர்கள். இந்நிலையில் நான்கு மாதங்களுக்குப் பிறகு குழந்தை மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

திருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா இவருக்கும் மீனா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மீனம் கர்ப்பமாக இருந்ததால் அவரது தாய் வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளார்.இதையடுத்து தாய் வீட்டிற்குச் சென்ற மீனாவிற்கு திடீரென மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட மீனாவின் பெற்றோர்கள் அவருக்கு பிறந்த குழந்தையை உறவினர்களிடம் விற்றுள்ளனர். இந்நிலையில் திருப்பூரில் இருந்து தனது மனைவியை பார்ப்பதற்காக சென்ற ராஜா மனைவியிடம் தனது குழந்தை இல்லாததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து இதுகுறித்து மீனாவின் பெற்றோரிடம் கேட்டபோது அவரிடம் குழந்தை இறந்து பிறந்ததாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த மீனா மிகுந்த மனவருத்தத்தில் இருப்பதாகவும் அவரது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவர் குணமடைய பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு ஒருவழியாக குணமடைந்துள்ளார். இந்நிலையில் தனது பெற்றோர்கள் தனக்கு பிறந்த குழந்தையை உறவினர்களுக்கு விற்பனை செய்ததை அறிந்த மீனா இதுகுறித்து தனது கணவர் மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் இந்த புகாரை விசாரிக்க காவல்துறையினர் தனிப்படை குழு அமைத்து விசாரணையை தொடர்ந்து வந்தனர்.

இதையடுத்து மீனாவின் பெற்றோரிடம் விசாரிக்கையில் அந்த குழந்தை உறவினர் ஒருவருக்கு நீக்கப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில் குழந்தையை மீட்டு காவல்துறையினர் உரிய பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த தம்பதியினர் அண்ணன்-தங்கை முறை என்பதால் அவர்களின் பெற்றோர் இப்படி செய்துள்ளனர்!