சேலத்தில் நள்ளிரவில் வீடு வீடாக சென்றுக் கதவை தட்டி பிதியைக் கிளப்பும் மர்ம நபர் குறித்த சி.சி.டி.வி காட்சிகள்.வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது
நள்ளிரவில் பெண்கள் வீட்டு கதவை வேகமாக தட்டிவிட்டு ஓட்டம்! சேலத்தை கலக்கும் சைக்கோ!

சேலம் அம்மா பேட்டையில், கடந்த சில தினங்களாக யாரோ வேண்டும் என்றே வீட்டின் கதவை தட்டிவிட்டு ஓடி ஆட்டம் காட்டி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்ட, அருகில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த போது பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
இரவில் ஒவ்வொரு வீடாக சென்று உள்ளே நோட்டமிடும் மர்ம நபர், பெண்கள் மட்டும் தனியாக இருந்தால் கதவை தட்டி விட்டு செல்வதும், மாடியில் இருந்து வீட்டிற்க்குள் நுழைய முயல்கிறான்.
பின்னர் ஆட்கள் நடமாட்டம் தென்பட்டால் பயந்து சட்டையை கழட்டி அக்குளில் வைத்துக்கொண்டு ஓட்டம் பிடிப்பதுமாக பதிவாகியுள்ள காட்சிகள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அந்த நபர் மன நலம் பாதிக்கபட்டவரா எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது.